சர்வதேச தேனீக்கள் தினம் 206

ஐ.நா-வின் உணவு ஸ்தாபனமும், ஐரோப்பிய ஒன்றியமும் சேர்ந்து மகரந்தம் பரப்புகிறவர்களைக் காப்பாற்றுங்கள், என்று குரல் கொடுத்திருக்கின்றன. முக்கியமாக தேனிக்களின் அழிவை நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சுட்டிக் காட்டுகின்றன.

“தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், சிறு குருவிகள், வண்டுகள், வௌவால்கள் போன்றவையே எமக்குத் தேவையான உணவை இயற்கையில் தயாரிப்பதற்கு முக்கியமானவையாக இருக்கின்றன. இந்த மகரந்தம் பரப்பும் உயிரினங்கள் இல்லையென்றால் எமது உணவுத் தயாரிப்பு நடக்காது,” என்கிறார் ஐ.நா- உணவு அமைப்பின் தலைவர் ஹோஸே கிரசியானோ டி சில்வா.

அதை ஞாபகப்படுத்த வருடாவருடம் 20/06 திகதியில் சர்வதேச தேனீக்கள் தினம் இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது ஸ்லோவேனியத் தேனி ஆராய்ச்சியாளரான அண்டன் ஜன்ஸாவின் பிறந்த தினமாகும்.

உலகின் உணவுத் தயாரிப்பில் 90 விகிதமானவை தேனீக்களாலேயே நடக்கின்றன. ஆனால், சமீப வருடங்களில் விவசாயத்துக்காகப் பரவலாகப் பாவிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் தேனீக்களையும் பாதித்து அவைகள் அழிவதற்கும் காரணமாவது கவனிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் 40 விகிதமான தேனீ, பட்டாம்பூச்சி, வண்டு இனங்கள் இதனால் ஒரு வியாதியால் பாதிக்கபட்டு முழுவதுமாக அழிந்துவிடும் ஆபத்தில் இருக்கின்றன என்று குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *