“மகிழ்ச்சியான நாடுகள்” பட்டியலில் பின்லாந்து முதலிடம்

2018ம் ஆண்டின் உலகின் மிக”மகிழ்ச்சியான நாடுகளின்” பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்தது.இந்த ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி ஐக்கிய நாட்டு சபையின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் அது தெரிவாகியுள்ளது.ஸ்கேன்டினேவியன் நாடுகளில் ஒன்றான பின்லாந்து கடந்த ஆண்டின் மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடத்திலிருந்த தன் அண்டை நாடான டென்மார்க்கைப் பின்னுக்குத் தள்ளி இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஐக்கிய நாட்டு சபையினால் வருடாவருடம் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் தயாராகிறது மைனஸ் இருபது டிகிரி குளிரும் , சொற்பமான நாட்களே சூரிய உதயம் கொண்ட பின்லாந்து எப்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது.5.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் பின்லாந்து 150 வருடங்களுக்கு முன் பெரும் பஞசத்தைச் சந்தித்தது ஒரு ஐரோப்பிய நாடு.ஆனால் தற்போது பின்லாந்து மிக ஸ்திரத் தன்மை கொண்ட,பாதுகாப்பான,மிகச்சிறந்த அரசாங்கத்தைக் கொண்ட நாடக திகழ்கிறது.
பின்லாந்து மக்கள் உலகிலேயே அதிக வருமான வரி கட்டுபவர்களாகவும் உள்ளார்கள் என்றாலும் அவ்வரியானது தங்கள் நலனுக்காக பயன்படுகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி பின்லாந்து ஊழலற்றும்,சமூக முன்னேற்றத்தில் சிறந்து விளங்குவதாகவும் ஐ.நா வின் ஆய்வறிக்கைக் கூறுகிறது.பின்லாந்தின் காவல் துறை உலகிலேயே மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதாக ஐ.நா வின் அறிக்கை சான்றளிக்கிறது.அதிலும் குறிப்பாக பின்லாந்து மனித நேயம் மிக்க நாடக அறியப்படுகிறது,குறிப்பாக அகதிகளுக்கும் புகலிடம் கோருவோருக்கும் ஆதரவு கரம் நீட்டி பாதுகாப்பதில் பின்லாந்துக்கு நிகர் அதுவே.
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்த நிலையில் , நோர்வே,டென்மார்க்,ஐஸ்லாந்து,சுவிஸர்லாந்து போன்ற நாடுகள் வரிசைப்படி அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.அமெரிக்கா 18 வ்து இடத்தையும்,பிரான்ஸ் 28 வது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.vetrinadai.com/news/energy-check-france-for-families/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *