“தற்கொலைகளை தடுக்கலாமா?”- நரம்பியல்,உளவியல் நிபுணர் டொக்டர் புவனேந்திரன் மற்றும் மீரா பாகு(Meera Bahu) பேசுகின்றார்கள்

ஆற்றுப்படுத்தல்” பயிற்சி உரையாடல்களின் தொடர்ச்சியாக “தற்கொலைகளை தடுக்கலாமா? (Can we prevent suicides?)” என்ற விடயம் தொடர்பாக அண்மையில் உரையாடப்பட்டது. Tamil Helps Line சார்பில் வாராந்தம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் பயிற்சி நெறியின் தொடர்ச்சியாக பத்தாவது உரையாடலாக இது நடைபெற்றது.

தாயகத்திலும் புலத்திலும் பல மட்டங்களிலும் அண்மைய நாள்களில் தற்கொலைகள், சமூக,குடும்ப கொலைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உரையாடலில் நரம்பியல் மற்றும் உளவியல் நிபுணர் டொக்டர் கனகசபை புவனேந்திரன் அவர்கள் தனது கல்வி மற்றும் தொழில் சார் நிபுணத்துவம் ,மற்றும் அதனூடான அனுபவங்களை தொகுத்து உரையாடல் வழி இந்த பயிற்சி நெறியை நெறிப்படுத்துகிறார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் Tamil Helps Line சார்பில் டொக்டர் புவிநாதன் அவர்கள் பயிற்சி நெறி மற்றும் உரையாடல்களின் நோக்கம் குறித்து தம் விளக்கவுரையையும் வழங்கியிருந்தார்.

நீண்ட உரையாடலாக அமையும் இந்த ஒளித்தொகுப்பு,சமகாலத்தில் எம் சமூகத்திற்கு அவசியமான ஒரு பகிர்வாக அமையும் என்ற வகையில் வெற்றிநடை இணைய தளம் வாசகர்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறது. கேட்டு பயன்பெற்று உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *