பாலாஜி வெங்கடேஸ்வரா – ஐரோப்பாவில் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று

ஐரோப்பாவில் அமைந்திருக்கும் ஆலயங்களில் வைஷ்ணவ ஆலயங்களில் ஒன்றான பேர்மின்ங்காம் பாலாஜி வெங்கடேஸ்வர ஆலயம் ஐரோப்பாவில் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகும். ௨௦௦௬ம் ஆண்டு மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட இந்த ஆலயம் இந்தியாவின் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமானால் ஈர்க்கப்பட்டு அதன் சாயலோடு இணைக்கப்பட்ட ஆலயமாக இது விளங்குகிறது.

விநாயகர்,பார்வதி சமேதரராக சிவன். வள்ளி தெய்வானை சமேதரராக முருகன்,நவக்கிரகங்கள்,ஐயப்பன்,ஆஞ்சநேயர்,சீரடி சாய் பாபா என்று மக்கள் வழிபத வழிபடு அமைவிடங்கள் தனியாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.பல்வேறு பன்னாட்டு மக்களும் விஜயம் செய்யும் ஆலயங்களில் ஒன்றாக இது திகழ்கின்றது. அத்தோடு இந்த ஆலயத்தில் ஏனைய சமயம் சார்ந்தவர்களையும் இணைக்கும் அம்சமாக அந்த அந்த சமயத்தினரின் வழிபடு குன்றுகளும் ஆலயத்தை சூழ அமைக்கபட்டிருக்கிறது.

அத்தோடு ஆலயச்சூழலில் பாற்கடல் மீது பள்ளி கொள்ளும் பரந்தாமன் போல அமைக்கட்டிருக்கும் நீர்த்தடாக கிருஷ்ணன் பார்க்கும் அனைவரது கண்களும் கவரும் படியாக அமைந்துள்ளது.பூக்களால் நிரந்த சோலைகளுக்குள் அந்த நீர்த்தடாகம் அமைந்துள்ளது.

தாயகத்தில் இருக்கும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திதற்கு அடிக்கடி வியம் செய்வதை  ஒப்பீடு செய்து வெற்றிநடை பாலாஜி வெங்கடேஸ்வரா  ஆலய காட்சிகளை பதிவுசெய்திருக்கிறது.மனக்கண்ணில் தரிசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *