மருத்துவ பேராசிரியரானார் வைத்திய கலாநிதி குமணன் திருநாவுக்கரசு

யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியராக பொதுமருத்துவ வல்லுநர் மருத்துவ கலாநிதி திருநாவுக்கரசு குமணன் தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

2008ம் ஆண்டளவில் பொதுமருத்துவ வல்லுனராகி 2010ம் ஆண்டிலிருந்து முதுநிலை விரிவுரையாளராக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கடமையாற்றியிருந்தார்.

மருத்துவ பேராசிரியராக இவரது பெயர் முன்மொழியப்பட்ட நிலையில் பேரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ துறை முதலாவது பேராசியராக வந்துள்ள வைத்திய கலாநிதி குமணன் அவர்கள், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாவது பேராசிரியராகவும் அமைக்கிறார்.

இதற்கு முன்னதாக இவர் இலங்கயிலும் இந்தியாவிலும் நிர்வாக அலகுகளில் உயர் பதவிகளை வகித்து நிர்வாகத்துரையிலும் பல அனுபவங்களை பெற்ற ஆளுமையாவார்.இந்தியாவில் தமிழ்நாடு வெல்லூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பதிவாளராக கடமையாற்றியதோடு இலங்கையில் சுகாதார அமைச்சின் கீழ் பொது மருத்துவ அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார்.

பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் மூன்று நிலை நேர்முகத்தேர்வுகளிலும் பங்குபற்றி தேறிய வைத்தியர் திரு குமணன் அவர்கள், யாழ்ப்பாணம் டிறிபேக் கல்லூரி,அளவெட்டி அருணொதயாக் கல்லூரி, மற்றும் செண் ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பழையமாணவர் ஆவார்.

அத்தோடு பேராசிரியர் குமணன் அவர்கள் மறைந்த மாவட்ட நீதிபதி ,விகடகவி திருநாவுக்கரசு அவர்களின் புதல்வன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *