தொடரும் ஈழத்தின் அவலம் – மருதநகரிலும் நடந்திருக்கிறது

மனைவியின் இறுதி நிகழ்வில் வெறும் மூன்று மணித்தியாலயங்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஈழத்தின் அரசியல் கைதிக்கு நடந்த அவலம். கணவன் மனைவியை இழந்து சிறையிலிருந்து பார்க்க வந்தபோது ஊரே அழுதது உலகம் இன்னுமா நெகிழாமலிருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

தாயின் இறுதிக்கடனுக்காக மகன் சுடுகாடு செல்ல தந்தையும் சிறைச்சாலை வாகனத்தில் ஏற மகள் தந்தையின் பாசப்பிணைப்பால் அதே வாகனத்தில் உடனேற சென்றது ஈழத்தின் அவலநிலை தொடர்வதை கோடிட்டு காட்டுகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு அங்குமிங்கும் சர்வசாதாரணமாக கைதுசெய்யப்பட்டவர்களில ஆனந்த சுதாகர், மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியாயார். தன் பிள்ளைகளுக்கு இனி யார் துணையோ என்ற ஏக்கத்தாலும் சோகத்தாலும் தவித்து வந்த ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக காலமாகியிருந்தார்.

இவரின் இறுதி நிகழ்வு இன்று(18/032018) கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டு வெறும் மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார். பிள்ளைகளை கண்டவுடன் கட்டியணைத்து கதறிய ஆனந்தசுதாகர் தன் பிள்ளைகளுக்கு யார் துணையோ என்று ஏக்கமும் தவிப்பும் உடனிருக்கையில் மீண்டும் பொலீஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.

தந்தை சிறைச்சாலை வா கனத்தில் ஏறிய போது அவரது மகளும் அதே சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் இடம்பெற்றமை அனைவரினதும் மனதையும் நெகிழச்செய்து ஊரே கதறியழ வைத்துள்ளது..

அப்பாவின் 2008 ஆம் ஆண்டு கைதுக்கு பின்னர் அம்மாவின் அரவணைப்பில் வாழந்த பிள்ளைகள் தற்போது பெற்றோர் இல்லாமல் வாழ்வது என்பது தொடரும் ஈழத்தின் அவலநிலைகளை கோடிட்டு காட்டுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *