சர்ஹோசி கடாபியிடமிருந்து பலகோடி யூரோ பெற்றாரா ? தொடரும் காவல்துறை விசாரணை

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோசியை இன்று பிரான்ஸ் காவல்துறை தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்பத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் லிபிய ஜனாதிபதி கடாபியிடமிருந்து சட்டத்த்திற்கு புறம்பாக பலகோடி யுரோகளை பெற்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை விசாரணைகளை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
இதற்கு முன்னதாக 2007 ம் ஆண்டிலும் இதேசந்தேகம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அன்றைய நாள்களில் சர்ஹோசியின் நடவடிக்கை பணிக்குழுத்தலைவர் அதனை மறுத்திருந்தார். இப்போது மீண்டும் 2012 தேர்தல்களில் அதிகளவு பணம் செலவழித்தார் என்ற சந்தேகத்தில் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி காவல்துறை தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு உட்படுத்துகின்றமையானது பிரான்சிலும் உலக அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விசாரனை முடிவுகள் எப்படி அமையும் என்பத்தும் ஒர் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

http://www.vetrinadai.com/news/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%86/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *