” எனர்ஜி செக் ” – ஃப்ரன்ஞ்ச் குடும்பங்களுக்கான மின்கட்டண உதவித்திட்டம்

கடந்த சில மாதங்களாக ஃப்ரான்ஸின் நான்கு மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப் பட்டு வந்த ஃப்ரென்ஞ்ச் குடும்பங்களுக்கான மின்கட்டண உதவி ( எனர்ஜி செக் ) திட்டம் , இன்று முதல் (26 மார்ச்) ஃப்ரான்ஸ் முழுவதும் அமுல் படுத்தப்படுகிறது . இந்த திட்டத்தின் மூலம் குறைவான வருவாய் பெறும் நான்கு மில்லியன் குடும்பங்கள் பயனடைய உள்ளதாக செய்திகளில் வெளியாகியுள்ளன.
இந்த உதவியை பெற ஃப்ரான்ஸ் வாழ் குடும்பங்கள் எந்த வித முயற்சியும் எடுக்கத் தேவையில்லை , மின் கட்டணத்திற்கான காசோலை தங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் , ஒவ்வொரு குடும்ப ஆண்டு வருமானத்தைப் பொறுத்து இந்த உதவித் தொகை ( 48 யூரோவிலிருந்து 227 யூரோ) மாறுபடும் .
இந்த உதவியின் மூலம் பயனாளரின் வீட்டு மின்சார மற்றும் எரி வாயு கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் கட்டவிருக்கிறது . 2 வருடங்களாக பரிசீலனையில் இருந்து வந்த இந்தத் திட்டம் இந்த ஆண்டிலிருந்து நடைமுறைப் படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தால் ஃப்ரான்ஸின் நடுத்தர குடும்பங்கள் மிகவும் பயன் பெறப் போகின்றன .
இது மட்டுமில்லாமல் மேலும் பல பயன்களும் உள்ளன என ஃப்ரான்ஸின் சுற்றுச் சூழல் அமைச்சர் நிக்கோலா யூலோ கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *