Monday , October 14 2019
Home / Featured Articles / பரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்

பரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்

திரையுலப்பிரமுகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் பலராலும் பார்க்கப்பட்ட பாராட்டப்பட்ட , திரைப்பட இயக்குனர் செழியனின் டூ லெட் To Let திரைப்படம் பரீஸ் மாநகரத்தின் திரை அரங்கிற்கும் மக்கள் பார்வைக்காக திரையிடப்படவிருக்கிறது.

பெரு நகரத்தில் சிறு கனவை எளிமையான சினிமாவாக பிரமாண்டமான திரை அரங்கத்துக்குள் கொண்டு வந்ததில் செழியன் வெற்றிபெற்றிருப்பதாக பலரும் பாராட்டுவதை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.

திரைப்படங்களுக்கு இருக்கவேண்டிய பிரமாண்டமாக, அதனோடு இணைந்து திரைக்கதையின் முக்கியத்துவத்துவத்தை உணர்ந்த செழியன் மக்கள் ரசனைக்கேற்றபடி நகர்த்தி வெற்றிகண்டிருப்பதாக பேசப்படும் அதேவேளை தமிழகத்தின் திரையரங்குகளில் முழு ஆசனங்களும் நிரம்பய நிலையில் வெற்றிகொண்டிருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த நிலையில் நாளை 24ம் திகதி பெப்பிரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு ஒரே ஒரு காட்சியாக பாரீஸ் மாநகர திரைக்கு டு லெட் – ToLet திரைப்படம் வருகிறது.

திரையரங்கின் முகவரி
Publicis Cinémas
129 Av. des Champs-Élysées, 75008 Paris.
Métro : N°- (1)(2) (Charles de Gaulle Étoile)

திரைப்பட ரசிகர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வருகையை உறுதிப்படுத்தி திரைப்படத்தின் ஆரம்பம் முதலே ரசிக்க வேண்டும் என்று திரைப்பட பரீஸ் வெளியீட்டுக்குழு வேண்டுகிறது

About வெற்றி நடை இணையம்

Check Also

மல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும் கலைமாலை

மல்லாகம் மக்கள மன்றம் பெரும்மையுடன் வழங்கும் மாபெரும் கலைமாலை (2019.09.28) சனிக்கிழமை மாலை 6மணிக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது. தென்னிந்தியாவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *