ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றம் – தெரேசா மே உத்தரவு

பிரித்தானியாவில் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய உளவாளி Sergei skripal மற்றும் அவரின் மகள்  தொடர்ந்தும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ரஷ்யாவிடம் பதிலளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

தொடர்ந்தும் ரஷ்யாவின் மௌன நிலையில் பிரித்தானியாவில் இருக்கும் 23 ரஷ்ய அதிகாரிகளையும் வெளியேற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் ரஷ்யா பிரித்தானியாவின் குற்றச்சாடுக்களை முற்றிலும் மறுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட Sergei skripal ரஷ்யாவின் முன்னாள் உளவுப்பிரிவில் பணியாற்றி பின்னர் ரஷ்ய உளவாளிகளை பிரித்தானியாவிடம் காட்டிக்கொடுந்திருந்தமையினால் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து பின்னர் 2010 ம் ஆண்டில் அடைக்கலம் பெற்று வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் நேரடியாகவே ரஷ்ய அரசே குற்றவாளி என்று சுட்டிக்காட்டி பிரித்தானியாவில் இருக்கும் அதிகாரிகளை வெளியேறுமாறு அதிரடியான உத்தரவை பிறப்பித்தார்.அதற்கு ஒருவார காலை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் ரஷ்யா இந்த நடவடிக்கையை கடுமையாக சாடி இது பகை உணர்வு கொண்டது எனத் தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கைகள் ரஷ்யாவில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *