பெடரரின் மீள் எழுச்சி – மீண்டும் வென்றார் லாரெஸ் உலக விருதுகள்

லாரெஸ் உலக விருதுகள் வழங்கும் நிகழ்வில் உலகின் முதல்தர டென்னிஸ் வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் இரண்டு விருதுகளை தம்வசப்படுத்தி வெற்றி பெற்றார்.

ஒவ்வொரு ஆண்டிலும் அந்த ஆண்டு முழுவதுமாக குறிப்பிட்ட விளையாட்டில் அல்லது மைதானத்தில் தொடர் வெற்றிகளோடு ஆதிக்கம் செலுத்தும் முன்னணி வீரர்களை கௌரவப்படுத்தும் இந்த விருது வழங்கும் விழா இந்த வருடமும் மொனோக்கோவில நடைபெற்றது.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதைப் பெற்ற அதே வேளை காயம் மற்றும் ஆட்டங்களில் தொய்வு என்று போட்டிகளில் வீழ்ச்சியுற்றாலும் சில காலங்களில் மீள் எழுச்சி பெற்றமைக்கான சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. இவை எல்லா விருதுகளுடன் ரோஜர் மொத்தமாக 6 லாரெஸ் உலக விருதுகளை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *