சாதனை மனிதன் Sir Roger Bannister மரணம்

சாதனை மனிதன்பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் சேர் ரோஜர் பேனிஸ்டர் (sir Roger Bannister) தமது 88 வது வயதில் காலாமாகி விட்டார் .
1954ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டில் நடந்த பந்தயம் ஒன்றில் ரோஜர் பேனிஸ்டர்  மூன்று நிமிடம், 59.4 நிமிடங்களில்  மைல் தூரத்தை ஓடிக் கடந்து சாதனை படைத்தார்.

ஒரு மைல் தூரம் என்பது குறிப்பிட்ட நிமிடத்துக்குள் ஓடிக்கடப்பது  மனித சாத்தியமற்றது என்று நினைத்த காலத்தில் அவரது சாதனை நிலை நாட்டப்பட்டது. அவரின் சாதனையை அடுத்து மேலும் பலர் அந்த சாதனையை புரிந்தனர் எனினும் முதலில் அந்த மனத்தடையை உடைத்தவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

பேனிஸ்டரின் உலக சாதனை 46 நாள்களிலேயே முறியடிக்கப்பட்டது.

எனினும் தடகள வரலாற்றில் ரோஜர் பேனிஸ்ரர் பல பதக்கக்கங்களையும் சாதனைகளையும் தட கள வரலாற்றில் நிலைநாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *