உலகத்தில் தண்ணீர்

தண்ணீர் நாள் மார்ச் 22 இன்று உலக அளவில் கொண்டாடப்படுகிறது.கொண்டாடப்படுவது என்று சொல்வதை விட நீர் வளம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்து செல்லவதற்காக இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது.

தினந்தோறும் கடுமையான பாதிப்பையும் வளப் பற்றாக்குறையையும் எதிர் நோக்கியுள்ள நீர் வளம் ,எம்மை அறியாமலேயே  இவ்வுலகத்தை விட்டு குறைந்து கடும் பற்றாக்குறையாக மாறும் சூழல் ஏற்றபட்டு வருகின்றமையை உணர்ந்து ஐக்கிய நாடுகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதனடிப்படையில் 1993 ம் ஆண்டிலிருந்து உலக நீர் நாள் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளோடு எடுத்துக்கொள்ளப்படும் உலக நீர் நாள் இந்த வருடம் இயற்கைக்காக நீர் என்ற கருப்பொருளை முன்னிறுத்துகிறது.(Nature for Water).

” THE ANSWER IS IN NATURE”

How can we reduce floods, droughts and water pollution?

By using the solutions we already find in nature.

கிட்டத்தட்ட 2.1 பில்லியன் மக்கள் உலகில் சுத்தமான நீர் கிடைக்காது பல நோய்களுக்கு உள்ளாகுவதாகவும் ஐ நா சுட்டிக்காட்டுகிறது.

எமக்கெல்லாம் நீர் கிடைக்கிறது தானே நீர் பற்றாக்குறை என்பத்தை நம்ப முடியுமா என்று உங்களில் பலர் நினைப்பது புரிகிறது எனினும் உலகின் யாதார்த்தமாக எதிர்வு கூறப்படும் விடயம் என்னவெனில் உலகில் எதிர்காலத்தில் காலத்தில் நீர் என்பது தட்டுப்பாடான பொருளாக மாறிவிடும் என்பதுன் தான். இதும் ௨௧ம் நூற்றாண்டின் சவால்களில் மிகமுக்கியமானது.

இன்றே அதை உணர்ந்து நீரை அளவோடும் ஆக்கத்தோடும் பயன்படுத்துவோமாக என்பது வெற்றிநடை இணையத்தின் இன்றைய பதிவாகிறது.

இதையும் படிக்க

https://www.vetrinadai.com/social/thomas-robert-malthus-population/

https://www.vetrinadai.com/featured-articles/1109/

https://www.vetrinadai.com/news/technology/self-cycle/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *