உரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்

பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகளின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் வட மாகாண சம்பியன் பட்டத்தை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் வெற்றி பெற்றது. 18வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் இந்த வெற்றிச்சாதனையை வட மாகாண மட்டத்தில் சைவத்தமிழ் வித்தியாலயம் பதிவு செய்தது.

யாழ் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் இறுதிபோட்டியில் பருத்தித்துறை சென் தோமஸ் கல்லூரி அணியை எதிர்த்து போட்டியிட்ட சைவத்தமிழ் வித்தியாலயம் முதல் சுற்றில் பெற்றிருந்தாலும் இறுதி இரண்டு சுற்றுக்களிலும் விறுவிறுப்பாக வெற்றி பெற்று வடமாகாண சம்பியனாகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *