சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஹாட்லியின் பிரகாஷ்ராஜ்

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஹாட்லியின் பிரகாஷ்ராஜ் இந்த போட்டிகளில் பங்கேற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். அண்மையில் அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கம் சுவீகரித்து சாதனை முறியடிப்பு செய்து பெருமை சேர்த்த பிரகாஷ்ராஜ் தெற்காசியப் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றும் வட மாகாண வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தட்டெறிதல் போட்டியில்  பங்கேற்க தயாராகும் பிரகாஷ்ராஜ்  தெற்காசிய போட்டிகளில் பங்கேற்பதற்கான அடைவு மட்டத்தை அடைந்து திறம்பட சாதனை நிகழ்த்தியதனாலேயே அந்த வாய்ப்பு உறுதியாகியுள்ளது. சிறிலங்காவில் இந்த வருடம் நடைபெறவுள்ள இந்த தெற்காசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் மொத்தம் 84 இலங்கை கனிஷ்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளதாக வெளியாகியுள்ள பெயர் பட்டியலில் ஒரேயொரு வட மாகாண வீரராக ஹாட்லியின் பிரகாஷ்ராஜ் அமைகிறார்.

அது மட்டுமில்லாமல் பிரகாஷ்ராஜ் அகில இலங்கை ரீதியில் சம்மட்டி எறிதல் போட்டியிலும் சாதனை நிலைநாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தெற்காசியப்போட்டிகளில் சிறிலங்காவைத்தவிர இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,பூட்டான்,நேபாளம் போன்ற நாடுகள் போட்டிகளில் பங்குபற்றுகின்றன. இலங்கை அதிக போட்டியாளர்களை பங்கு பற்ற வைப்பதால் இந்த வருடம் கூடிய பதக்கங்கள் வெல்லும் வாய்ப்புகள் உண்டு என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *