ஆறு வருடங்களுக்குப் பின்பு திரும்பி வந்த இருதயம்

அயர்லாந்தின் முதலாவது பேராயர் லோரன்ஸ் ஓடூல் 1180 இல் பிரான்ஸில் இறந்தபின்பு அவரது இருதயம் அயர்லாந்துக்குக் கொண்டுவரப்பட்டது. அயர்லாந்தின் பாதுகாவலராகக் கருதப்படும் அவரது இருதயம் கிறீஸ்து ராஜா தேவாலயத்தில் பவுத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது.

2012 இல் இரும்புப் பெட்டிக்குள், ஒரு பேழைக்குள் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த இருதயத்துக்குப் பதிலாக சில பொன் ஆபரணங்களை வைத்துவிட்டு யாரோ அதைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்.

ஆறு வருடங்களாகக் காணாமல் போயிருந்த அந்த இருதயம் மீண்டும் யாராலோ அத்தேவாலயத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. மேலதிக விபரங்களை வழங்க அயர்லாந்து பொலீஸ் மறுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *