பிரான்ஸின் 3D அச்சு இயந்திரத்தால் கட்டி முடிக்கப்பட்ட முதல் வீடு

பிரான்ஸின் நாந்த் மாநிலத்தில் முப்பரிமாண (3D) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ராட்சஸ ரோபோவின் உதவியுடன் ஒரு முழு வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
முப்பரிமாண முறையில் அச்சுப் பிரதியெடுத்து கட்டப்படும் வீடுகளின் வகையில் ஃப்ரான்ஸில் இதுவே முதல் வீடு.

ஃப்ரான்ஸின் தெற்கு மாநிலமான நாந்த்தில் அமைந்துள்ள “போத்தியர் ” என்ற ஊரில் ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த அச்சுப் பிரதியின் மூலம் கட்டப்படும் வீட்டின் வேலைகள் புதன் கிழமை , 21 மார்ச் அன்று முழுமைப் பெற்றன . சிறப்பு வாய்ந்த இந்த வீட்டிற்கு Yhnova பெயரிட்டுள்ளனர் . இவ்வீட்டைக் கட்டி முடிக்க மொத்தத்தில் 195.000 யூரோக்கள் செலவழிக்கப்பட்டுள்ளது .

இந்த வீட்டின் சுவர்களை ஒரு பெரிய அச்சு இயந்திரம் மிகப் பெரிய ரோபோவின் உதவியுடன் அச்சடித்துத் தந்துள்ளது .

இந்த முப்பரிமாண தொழில் நுட்ப வீட்டில் மூன்று அறைகளும் , இரண்டு குளியல் அறைகளும் இருப்பதைப் போன்று வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது . இவ்வீடு அரசாங்கத்தால் கட்டித்தரப்படும் சமூக வீடுகள் (பப்ளிக் ஹௌசிங்).

எதிர் வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த வீட்டை ஒரு குடும்பத்திற்கு ஒதுக்கித் தர அரசு முடிவு செய்துள்ளது ..

வரும் ஆண்டுகளில் இது போன்ற 3டி தொழில் நுட்பத்தின் உதவியுடன் மேலும் சமுக பல வீடுகளைக் கட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுதுவது கமல்ராஜ் ருவியே

 

 

http://www.vetrinadai.com/news/technology/self-cycle/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *