நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி உடன் உரையாடல்-நாத விநோதம் 2018

நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாத சங்கமம் மற்றும் இந்திய திரைப்பட பின்னணி பாடகர்கள் அபே மற்றும் மது ஐயர் ஆகியோர் பங்குபற்றும் ஹாட்லிக்கல்லூரி ஐக்கிய ராச்சிய கிளை பெருமையுடன் வழங்கும் நாத விநோதம் 2018 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் April மாதம் 7ம் திகதி லண்டன் மாநகரத்தின் LOGAN லோகன் மண்டபத்தில் அரங்கேற தயாராகிக்கொண்டு இருக்கிறது.
அந்த வேளையில் அந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளுக்கு விடையாக அண்மையில் ஐபிசி தமிழ் வானொலியில் நடைபெற்ற வெற்றி நடை நிகழ்ச்சியில் நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி அவர்களும் மற்றும் ஹாட்லிக்கல்லூரி ஐக்கிய ராச்சிய கிளை பழைய மாணவர்சங்க கிளை செயலாளர் திரு சுரேந்திரன் அவர்களும் விருந்தினர்களாக பங்குபற்றி கலந்துரையாடி இருந்தனர்.
நாத விநோதம் நிகழ்ச்சியில் நாதஸ்வர இசைக்கலைவையுடன் திரையிசையும் நடன நிகழ்ச்சிகளும் ஒரே அரங்கில் கலக்க இருக்கும் பிரமாண்டம் எப்படி இருக்கும் என்பதற்கு விடையாக அந்த நேர்காணல் அமைந்துள்ளது.

அதன் ஒலிப்பதிவை கீழே அழுத்திக்கேட்கலாம்


http://www.vetrinadai.com/events/hartley-college-natha-vinotham-2018/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *