பிரிட்டனுக்கென்று தனியாக செயற்கைக் கோள் திட்டமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து ஸ்தாபித்த கலிலியோ என்ற செயற்கைக் கோள் ஆராய்ச்சித் திட்டத்தில் முதலீடு செய்த சுமார் 1 பில்லியன் பவுண்டுகளைத் திரும்பக் கோரும் என்று பிரிட்டிஷ் வர்த்தக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். காரணம் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து பிரிட்டன் கலிலியோ திட்டத்தில் இருந்து பயன்பெறுவதைத் தடுக்கும் என்று குறிப்பிட்டிருப்பதாகும்.

பிரிட்டன், ஐ ஒன்றியத்திலிருந்து வெளியேறும்போது கொடுக்கப்படவேண்டிய நஷ்ட ஈடுகள், விலகியபின் எப்படியான தொடர்புகள் வைத்திருக்கப்படும் போன்றவை பற்றிய பேச்சுவார்த்தைகளின் போது இதுபோன்ற பல விடயங்களும் தீர்மானிக்கப்படுகின்றன.

“தொடர்ந்தும் ஒரு முக்கிய பங்காளராக கலிலியோ திட்டத்தில் பங்குபற்றி அதன் மூலம் பலன்பெறுவதும், ஐரோப்பாவுடன் எங்கள் திறமையைப் பகிர்ந்துகொள்வதுமே ஆகும். ஆனால், எங்களை அத்திட்டத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி செய்தால் நாம் அமெரிக்கா, ஐ.ஒன்றியம் தவிர்த்து மூன்றாவதாக இன்னொரு செயற்கைக் கோள் திட்டத்தை எங்களுக்காகத் தயாரித்துக் கொள்வோம்,” என்கிறார் வர்த்தக அமைச்சர் பிலிப் ஹம்மொண்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *