ஹாட்லியின் நாத விநோதம் 2018

ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் பிரித்தானிய கிளை வழங்கும் 2018 ம் ஆண்டின் நாத விநோதம் நிகழ்விற்கு தாயகத்திலிருந்து உலகப் பிரசித்தி பெற்ற நாதஸ்வரக்கலைஞன் குமரன் பஞ்சமூர்த்தி உடன் அணிசேர் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அத்துடன் இந்திய திரைப்படப் பின்னணி பாடகர்கள் அபே ஜோக்புக்கர் மற்றும் மது ஐயர் ஆகியோரும் உள்நாட்டின் கலைஞர்களும் ஒரே மேடையில் இணைந்து கலக்க, நாத விநோதம் அரங்கு ஏப்ரல் மாதம் 7ம் திகதி லண்டனின் மத்திய பகுதியில் அமைந்த லோகன் மண்டபத்தில்(Logan Hall) தயாராகவிருக்கிறது.

தவில் நாதஸ்வரம் திரையிசை நடனம் நாட்டியம் என அரங்கம் சிறப்புற அந்த நிகழ்விற்கான எதிர்பார்ப்புகள் அரங்க ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதை அவதானிக்கமுடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *