Sunday , March 24 2019
Home / Featured Articles / Dartford தமிழ் அறிவியற் கழக விளையாட்டுப்போட்டி

Dartford தமிழ் அறிவியற் கழக விளையாட்டுப்போட்டி

Dartford அறிவியற் கழக இல்ல விளையாட்டுப்போட்டிகள் இந்த வருடமும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 30ம் திகதி நடாத்துவதற்கு பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய கலாசார பாரம்பரிய அம்சங்களை தம் ஒவ்வொர நிகழ்விலும் பிரதிபலிக்கும் டாட்போர்ட் தமிழ் அறிவியற்கழகம் இந்த வருட விளையாட்டுப்போட்டிகளிலும் அப்படியான சிறப்பம்சங்களை உள்வாங்குவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.

சங்கிலியன் இல்லமாகவும் எல்லாளன் இல்லாமாகவும் இரு பிரிவாக பிரிக்கப்பட்ட இருவேறு இல்லங்களுக்கும் இந்த வருடமும் சளைக்காத பலத்த போட்டி இறுதிவரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறியவர்களுக்கு மட்டுமல்லாது நிகழ்வில் பங்கேற்கும் பெரியவர்களுக்கும் ஆண்கள் பெண்கள் இருபாலாருக்கும் போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

காலை 10மணிக்கே சரியாக ஆரம்பிக்கப்படும் இந்த விளையாட்டு நிகழ்வு மாலை வரை மிகவும் விறுவிறுப்பாக நீடிக்கும் என்று எதிர்வுகூறப்படுகிறது.

About வெற்றி நடை இணையம்

Check Also

மண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி

சிறப்பாக லண்டனில் நடைபெற்ற கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் மக்களின் சொல்லணா துயரங்களின்போது தோள்கொடுத்த வைத்தியர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *