Thursday , February 27 2020
Home / சமூகம் (page 5)

சமூகம்

social

“மகிழ்ச்சியான நாடுகள்” பட்டியலில் பின்லாந்து முதலிடம்

2018ம் ஆண்டின் உலகின் மிக”மகிழ்ச்சியான நாடுகளின்” பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்தது.இந்த ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி ஐக்கிய நாட்டு சபையின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் அது தெரிவாகியுள்ளது.ஸ்கேன்டினேவியன் நாடுகளில் ஒன்றான பின்லாந்து கடந்த ஆண்டின் மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடத்திலிருந்த தன் அண்டை நாடான டென்மார்க்கைப் பின்னுக்குத் தள்ளி இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஐக்கிய நாட்டு சபையினால் வருடாவருடம் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு மற்றும் …

Read More »

” எனர்ஜி செக் ” – ஃப்ரன்ஞ்ச் குடும்பங்களுக்கான மின்கட்டண உதவித்திட்டம்

கடந்த சில மாதங்களாக ஃப்ரான்ஸின் நான்கு மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப் பட்டு வந்த ஃப்ரென்ஞ்ச் குடும்பங்களுக்கான மின்கட்டண உதவி ( எனர்ஜி செக் ) திட்டம் , இன்று முதல் (26 மார்ச்) ஃப்ரான்ஸ் முழுவதும் அமுல் படுத்தப்படுகிறது . இந்த திட்டத்தின் மூலம் குறைவான வருவாய் பெறும் நான்கு மில்லியன் குடும்பங்கள் பயனடைய உள்ளதாக செய்திகளில் வெளியாகியுள்ளன. இந்த உதவியை பெற ஃப்ரான்ஸ் வாழ் குடும்பங்கள் எந்த வித முயற்சியும் …

Read More »

தாயகக் காற்றிற்கு சீமானும் அழைக்கிறார்

வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்தின் ஹரோ நகரத்தில் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் வீரத்தமிழர் முன்னணி வழங்கும் தாயகக் காற்று நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் மக்களை நிகழ்வில் பங்கு பற்ற வேண்டி அழைக்கும் ஒளிப்பதிவு வெளியாகியுள்ளதுஊ.ஈழத்தில் தாயகப்பாடல்கள் பல தந்த ஈழத்தின் இசையமைப்பாளரும் ஐரோப்பிய நாடுகளில் பல அரங்குகளில் தனித்துவத்துடன் வலம் வரும் இசைப்பிரியன் அவர்கள் இந்த அரங்கிலும் இசை வழங்க வருகின்றார். இந்நிகழ்ச்சியில் …

Read More »

பெண்களுக்குச் சம உரிமை எங்கள் பாரம்பரியத்தின் அழிவு.” போராடத் தயாராகும் கிரவேசிய மக்கள் குழுவினர்

“நாட்டில் ஆயுதப் பாவனைக் கட்டுப்பாடுகள் வேண்டும்,” என்று லட்சக்கணக்கான அமெரிக்க மாணவர்கள் தலைநகரை ஸ்தம்பிக்கவைக்கும் குரலை எழுப்பும் அதேசமயம் கிரவேசிய மக்கள் தம் மக்கள் விடயத்துக்காக ஆயிரக்கணக்கில் அணியில் போகிறார்கள். முதல்முதலாக உலகில் பெண்களுக்கெதிரான சகலவிதமான வன்முறைகளையும் ஒழித்துக்கட்டவேண்டும், தம்பதிகளுக்குள் நடக்கும் வன்முறைகளைத் தண்டிக்கவேண்டும், இரண்டு பாலினருக்கும் நாட்டில் சமத்துவம் கொடுக்கப்படவேண்டும் போன்ற உறுதிமொழிகளுடன் 2011 ம் ஆண்டு ஆறாம் மாதம் 11ம் திகதி பல ஐரோப்பிய நாடுகள் ஒரு …

Read More »

பிரான்ஸில் ஆங்கிலத் பரீட்சைகளுக்கு கட்டணம் இல்லை

பிரான்ஸில் இனி பல்கலைக் கழக மாணவர்கள் IELTS , TOFEL மற்றும் TOEIC போன்ற ஆங்கிலத் தேர்வுகளைக் கட்டணமின்றி எழுதலாம் என்று தெரிவிக்கபடுகிறது. இங்கிலாந்து பிரான்ஸ்க்கு அண்டை நாடாக இருந்தாலும் , இது நாள் வரை ஆங்கிலத்தை முழுதாக அங்கீகரிக்காத பிரான்ஸ் , இப்போது பிரென்ஞ்ச் மாணவர்கள் ஆங்கிலம் கற்பது அவசியம் எனக் கூறத் தொடங்கியுள்ளது . இதற்கு கடந்த 2016 ஆம் வருடத்தை விட 2017 ஆம் வருடத்தில் …

Read More »

இறுதித் துளி – சிந்திக்க வேண்டியது தான்

எதிர்காலத்தில் நீரால் ஏற்படும் சமவுடமை மாற்றத்தை வெறும் ஒரு நிமிடத்துக்குள் சொல்கிறது இந்தக் குறும்படம் இறுதித் துளி (Final Drop).தண்ணீர் தினமாகிய இன்று எம் வளமான நீரை நாம் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை நமது சமூக நடப்பியல்புகளுக்கு ஊடாக சிறப்பாக குறுந்திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மதி சுதா. வெறும் கைபேசியினால் மிகத்தெளிவாக படமாக்கப்பட்டிருக்கும் இந்த ஒரு நிமிட குறுந்திரை அகில இலங்கை அளவில் விருதுப்பட்டியலிலும் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது. சறுக்கி …

Read More »

உலகத்தில் தண்ணீர்

தண்ணீர் நாள் மார்ச் 22 இன்று உலக அளவில் கொண்டாடப்படுகிறது.கொண்டாடப்படுவது என்று சொல்வதை விட நீர் வளம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்து செல்லவதற்காக இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது. தினந்தோறும் கடுமையான பாதிப்பையும் வளப் பற்றாக்குறையையும் எதிர் நோக்கியுள்ள நீர் வளம் ,எம்மை அறியாமலேயே  இவ்வுலகத்தை விட்டு குறைந்து கடும் பற்றாக்குறையாக மாறும் சூழல் ஏற்றபட்டு வருகின்றமையை உணர்ந்து ஐக்கிய நாடுகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதனடிப்படையில் 1993 …

Read More »

குர்தீஷ் நவ்ரோஸுக்கும் தீபாவளிக்கும் தொடர்பு இருக்குமா? – குர்தீஷ் மக்களின் நவ்ரூஸ் புதுவருட நாள்

நவ்ரூஸ் புதுவருட நாள் மெஸபொத்தேமியா என்ற நாட்டைப் பற்றிச் சரித்திர பாடங்களில் படித்திருக்கிறோம். அந்த நாடு இன்றைய குவெய்த், ஈராக்கின் பெரும்பகுதியையும், சவூதி அரேபியாவின் சிறு பகுதியையும் உட்படுத்தியிருந்தது. வடக்கில் ஸாக்ரோஸ் மலைப்பிராந்தியத்தை எல்லையாகக் கொண்டிருந்த அந்த நாட்டை ஈப்ராத்ஸ், தீக்ரிஸ் நதிகளும் அதன் கிளைகளும் வளப்படுத்தின. நல்லாட்சிகளும், கொடுங்கோலாட்சிகளும் ஒரு நாட்டு மக்களுக்கு மாறிமாறிக் கிடைப்பதுபோலவே மெஸபொதேமியருக்கும் நடந்தது. ஜாம்ஸிட் என்ற ஒரு அஸீரிய அரசன் அந்த நாட்டின் …

Read More »

18 வயதான ஐரோப்பியர்களுக்கு சுற்றுலா பயணம் போக அதிர்ஷ்டம்

18 வயதான 20, 000 ஐரோப்பியர்களுக்கு இவ்வருடம் ஐரோப்பாவை இலவசமாகச் சுற்றும் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. சமீப காலமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு மனப்பான்மையை பரவி வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, சமூகப் பிரச்சினைகள், லட்சக்கணக்கான அகதிகளின் வரவும் அவர்களைக் கையாள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் ஒற்றுமையின்மை போன்றவைகள் பிரிட்டனை அடுத்து சமீபத்தில் இத்தாலியிலும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு அலையை அரசியலில் பலப்படுத்தியிருக்கிறது. அந்த …

Read More »

“அழிவுக்காலத் தீர்க்கதரிசி ” மால்துஸ் ” கணிப்புக்கள் தவறாகின்றனவா?

சமூகக் கல்வி, மனிதர்களின் பிறப்புக்கள், பொருளாதாரம் போன்றவையை ஒழுங்காகப் படித்தவர்களுக்கு தோமஸ் மால்துஸ் என்றால் யார் என்று கட்டாயம் தெரியும்! பிரிட்டனைச் சேர்ந்த மால்துஸ் ஒரு பொருளாதார அறிஞர். தனது ஆராய்ச்சியின் மூலம் 1798 இல் “உலக மக்கள் தொகை உலகின் வளங்களால் சமாளிக்க முடியாத நிலைமைக்கு வளரும். அதன் உச்சக்கட்டத்தில் வியாதிகள், போர்கள், இயற்கை அழிவுகள் உண்டாகி மக்கள் தொகையை அவ்வப்போது அழித்துக் கட்டுப்படுத்தும்,” என்று விபரித்தவர் மால்துஸ் …

Read More »