Thursday , February 27 2020
Home / சமூகம் (page 4)

சமூகம்

social

லண்டனில் வெளியான தாமரைச்செல்வியின் வன்னியாச்சி

எழுத்தாளர் தாமரைச்செல்வியின்  “வன்னியாச்சி” நூல் லண்டனில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன்  அக்கதைகள்  தொடர்பாக நீண்ட இலக்கிய கருத்தாடல் நிகழ்வும் தொடர்ச்சியாக நடைபெற்றது. இலக்கிய ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்  திருமதி சந்திரா இரவீந்திரன் தலைமை தங்கியிருந்தார். மேலும்  இந்நிகழ்வில்,  இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  நவஜோதி யோகரட்ணம்,  இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், ச. வேலு மற்றும்   குணநாயகம் ஆகியோரால்   இந் நூல் தொடர்பான கருத்துரை வழங்கப்பட்டது. கருத்துரைகளைத் தொடர்ந்து அங்கு …

Read More »

யாழ் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி இன்று ஆரம்பமானது. பல்வேறு மருத்துவக் கண்டுபிடிப்புக்களையும் நவீன காலத்தின் மிக முக்கியமான மருத்துவ முறைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்குடனும் மருத்துவம் தொடர்பான அறிவியலை மக்களுக்கு எடுத்துச்செல்லும் நோக்குடனும் வெகுசிறப்பாக ஒழுங்குசெய்யப்படும் இந்த மருத்துவக் கண்காட்சி, இந்தவருடம் யாழ் மருத்துவ பீடத்தின்   40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஆரம்பித்திருக்கும் இந்த மருத்துவக் கண்காட்சி தொடர்ந்து வரும் …

Read More »

முகமாலையில் சிவபுரவளாகத்திற்கு அடிக்கல்

கிளிநொச்சி முகமாலையில் அன்பே சிவம் அமைப்பால் அமைக்கப்படவுள்ள சிவபுரவளாகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மார்ச் மாதம் 30ம் திகதி கொண்டாடப்பட்டிருக்கிறது. சுவிஸ் நாட்டின்  சூரிச் நகரத்தில் அமைந்த அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச்சங்கத்தினால் தான் இந்த  அன்பே சிவம் அமைப்பு இயங்குகின்றது. கிளிநொச்சி முகமாலை என்ற பிரதேசத்தை தெரிவு செய்த அன்பேசிவம் அமைப்பினர் அதற்கான செயற்திட்டம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதையும் வெளியிட்டுள்ளார்கள்.  எட்டு ஏக்கர் காணியில் 300 மில்லியன் ரூபாய் …

Read More »

நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி உடன் உரையாடல்-நாத விநோதம் 2018

நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாத சங்கமம் மற்றும் இந்திய திரைப்பட பின்னணி பாடகர்கள் அபே மற்றும் மது ஐயர் ஆகியோர் பங்குபற்றும் ஹாட்லிக்கல்லூரி ஐக்கிய ராச்சிய கிளை பெருமையுடன் வழங்கும் நாத விநோதம் 2018 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் April மாதம் 7ம் திகதி லண்டன் மாநகரத்தின் LOGAN லோகன் மண்டபத்தில் அரங்கேற தயாராகிக்கொண்டு இருக்கிறது. அந்த வேளையில் அந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளுக்கு …

Read More »

ஐரோப்பாவில் ஒரு வீதிகளற்ற கிராமம் !!!!

ஐரோப்பாவில் வீதிகளில்லாமல் கிராமங்கள் இருக்கிறதா என்று எவரும் சிந்திக்கலாம்.ஆனால் இருக்கிறது.நெதர்லாந்து நாட்டில் உள்ள கெய்த்தூர்ன் (Giethoorn) என்ற குட்டி கிராமம் தான் அது. ஐரோப்பாவில் வாகனங்களால் சூழல் மாசு படாத கிராமம் என்றுகூட சொல்லி விடலாம்.ஏனெனில் வீதிகள் இருந்தால் தானே வாகனங்களில் பயணிக்க முடியும்.!!!! நீங்கள் உங்கள் வாகனத்தில் இந்த கிராமத்துக்கு போனால் வாகனத்தை கிராமத்திற்கு வெளியிலேயே நிறுத்தி விட வேண்டும். ஏனென்றால் இந்த கிராமத்தில் போக்குவரத்து விதிகளை இல்லை …

Read More »

வேம்படி மகளிர் மாணவி அகில இலங்கையில் சாதனை

இலங்கையில் நேற்றையதினம் வெளியாகியுள்ள கபொத சாதாரணதர பரீட்சை முடிவுகளில் பல பாடசாலைகளும் தங்கள் சாதனைகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரீட்சை பெறுபேறுகளில் யாழ் மாவட்ட வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் மாணவி செல்வி மிருதி சுரேஷ்குமார் தனது அதிதிறமை சாதனையை இந்த தடவை பதிவு செய்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – 2018 இல் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினையும் தமிழ் மொழிப் …

Read More »

பீஜிங் வந்த பச்சை ரயில் – வியந்த சீன மக்கள் வந்தது யார்?

திங்களன்று, பங்குனி 26 ம் திகதியன்று பீஜிங் நகர மக்கள் தங்கள் நகரின் பல இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்துத் தடைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்து ஆச்சரியப்பட்டார்கள். சீனாவின் கம்யூனிசக் கட்சியின் அரசியல்வாதிகளின் பயணங்கள் பெரும்பாலும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தாலும் குறிப்பிட்ட நாளில் நகருக்குள் ஆங்காங்கே காணப்பட்ட நிலைமை வித்தியாசமாக இருந்தது. அதைத் தொடர்ந்து சீனாவில் பாவிக்கப்படாத மஞ்சள் குளானனயொன்றை வரியாகக் கொண்ட கடும்பச்சை நிற ரயிலொன்று பீஜிங் …

Read More »

லண்டன் கட்டிடத்தின் உச்சியில் 84 பேர் – யார் அவர்கள்?

லண்டன் ஐ.டி.வி கட்டடத்தின் கூரையில் பலர் நிற்பதைக் கண்டு அவ்வழியே சென்ற பலர் திடுக்கிட்டார்கள். பலர் அவசர உதவி இலக்கத்துடன் தொடர்பும் கொண்டார்கள். விரைவில் அதன் காரணம் ஊடகங்களில் பரவியது. விபரங்கள் தெரிந்தவுடன் அக்காரணம் பற்றியும் அதை ஐ.டி.வி நிறுவனம் கவனப்படுத்தியது பற்றியும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் உண்டாகின. #project84 என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கவனத்துக்கு உள்ளாக்கப்பட்டு அதே பெயரில் ஐ.டி.வி நிறுவனத்தினரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் வாராவாரம் 84 …

Read More »

சர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்

சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவனும் சம்மாந்துறை பிரதேசத்தில் வசித்தவருமான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருது மற்றும் சிறப்பு விருது உலகளாவிய ரீதியில் கிடைத்து சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.தாய்லாந்தின் பேங்கொக் நகரில் சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக மாநாடு மண்டபத்தில் போட்டியும் கண்காட்சியாகவும் …

Read More »

ஒரே ஒரு சட்டம் – துப்பாக்கிகளை மௌனமாக்கியது.

ஒவ்வொரு தடவையும் யாராவது ஒருவர் அமெரிக்காவில் துப்பாக்கியை எடுத்துப் பலரைச் சுட்டுக்கொல்லும்போதும் எழுப்பப்படும் சர்ச்சை “அமெரிக்காவில் துப்பாக்கிகளை வாங்க, வைத்திருக்க, பாவிக்க இருக்கும் மிக இலகுவான சட்டங்களை இறுக்கவேண்டுமா?” என்பதாகும். ஐக்கிய அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஆதரிக்கும் மிகப் பலமான இயக்கம் எந்தக் கட்சி நாட்டின் ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் தனது குறிக்கோளான மிக இலகுவான சட்டங்களைக் காப்பாற்றியே வருகிறது. தனி மனிதனின் உரிமைகளில் ஒன்று துப்பாக்கி வைத்திருப்பவைகளில் ஒன்றாகும் …

Read More »