Thursday , February 27 2020
Home / சமூகம் (page 3)

சமூகம்

social

தமிழ்நாட்டு காவல்துறை அராஜகத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம்

மிலேச்சத்தனமாக  சூடு நடத்தி மக்களை கொன்ற தமிழ்நாட்டு காவல்துறையின்  அராஜக நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் அமைப்புக்களால்  அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் உயிரை தமிழ் காவல்துறையினரே பறித்தெடுக்கும் துர்ப்பாக்கியமான சூழல் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நடந்தேறியிருக்கும் நிலையில் மக்கள் பல ஆயிரமாக கூடி எதிர்ப்பை வெளியிடவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை …

Read More »

பேராயருக்கு ஆஸ்திரேலியா சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பேராயர் பிலிப் வில்ஸன் அடிலெய்ட் நீதிமன்றத்தில் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இவர் சிறார்கள் மீது பாலியல் குற்றங்களைச் செய்த பாதிரியார்களைத் தனது சிறகுக்குள் வைத்துக் காப்பாற்றியதற்காக சிறைக்கனுப்படும் கத்தோலிக்க சமயத்தின் அதிமுக்கிய புள்ளி ஆவார். 1970 களில் ஆஸ்திரேலியாவில் பல சிறார்களைத் தனது பாலியல் இச்சைக்குப் பாவித்தவர் ஜேம்ஸ் பிளெட்சர் என்ற பாதிரியார். 1990 களில் கைது செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவின் பல நீதிமன்றங்களில் இதே …

Read More »

சர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி

சர்வதேச கபடி போட்டியில் பங்குபற்றுவதற்கு வடமாகாணத்திலிருந்து மிகச்சிறந்த அணியொன்று பங்குபற்றவுள்ளது. வடமாகாண அனைத்து மாவட்டகளிலிருந்தும் இதற்கு முன்னர்  நடைபெற்ற போட்டிகளிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட மிகத்திறன் வாய்ந்த அணிவீரர்களை உள்ளடக்கியதாக கபடி அணி உருவாக்கப்பட்டுள்ளது. பல  முன்னணி கழகங்களிலிருந்தும் பல அணிவீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. சிங்கப்பூரில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச சுற்றுப் போட்டிகளில் இந்தியா,மலேசியா,மாலைதீவுகள் ,நியூசிலாந்து, பூட்டான் போன்ற நாடுகள் இந்த கபடிப்போட்டிகளில் மோதவுள்ளது.   அண்மைய நாள்களில் …

Read More »

முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் அறிமுகம்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் பல்கலைக்கழக பௌதீகவியல் அலகு இயக்குனர்  திரு கணேசநாதன் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. கண்காட்சிப்படுத்துப்பட்ட கார்கள் விசேஷ தனியான வடிவமைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. Jaffna Style Gokart , Solar powered  Baby car,Pedal power car ,Ultralight Pickup எனப் பெயரிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட அந்த கார்கள் அனைத்தும் கண்காட்சியின் ஒரு நிகழ்வாக கார்ப்பவனியாக வலம் வந்தது.சிறுவர்களும் எளிதாக அந்த கார்களை செலுத்திதிருந்தார்கள் என்பது …

Read More »

Tssa uk உதைபந்தாட்டம் – திறந்த போட்டி – சென் பற்றிக்ஸ் அணி சம்பியன்

வெற்றிகரமான நிகழ்வாக நடைபெற்ற தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் TSSA UK பிரமாண்டமாக ஒழுங்கு செய்த உதைபந்தாட்ட திருவிழாவில் திறந்த போட்டியில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்கள் அணி வெற்றி வாகை சூடியது. பலவயதுப் பிரிவினராகவும் நடைபெற்ற இந்த போட்டிகளில் திறந்த வயதினருக்கான போட்டியை மிக எதிர்பார்ப்பான போட்டியாக அமைவது வழமை.இதில் இந்த வருடம் சென் பற்றிக்ஸ் அணி தங்கள் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் இந்த வருடம் காலநிலையும் …

Read More »

TSSA UK உதைபந்தாட்ட திருவிழா- போட்டி அட்டவணை வெளியாகியது

26 வது வருடமாக தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம்  TSSA UK பெருமையுடன் வழங்கும் உதை பந்தாட்டத் திருவிழா இந்த வருடமும் மிகச்சிறப்பாக நடைபெற ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே நிறைவேறியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.வரும் வங்கி விடுமுறை நாள் திங்கட்கிழமை நாளை நடைபெறவுள்ள இந்த உதைபந்தாட்டத் திருவிழாவில் எந்த எந்த அணிகள் எந்த எந்த அணிகளுடன் மோதவுள்ளது என்பது தொடர்பான போட்டி  அட்டவணை கடந்தவாரம்  அணிமுகாமையாளர்கள், விளையாட்டு சங்க நிர்வாக உறுப்பினர்கள், …

Read More »

தமிழர் பலம் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடட்டும் – யாழ் பல்கலை ஒன்றியம் அழைப்பு

தமிழர்களின் ஐக்கியத்தையும் நீதிக்கான வேட்கையையும் ஒரே குரலாக வெளிப்படுத்த தமிழர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலில்  வரும் மேமாதம் 18ம் திகதி ஒன்று கூட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முள்ளிவாய்க்கால்    மண்ணிலிருந்து அந்த நீதிக்கான அழைப்பை விடுத்திருக்கிறது. நவீன யுகத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய மனித அவலம்,  அதன் உச்சக்கட்டமாக நடத்தி முடிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இனவழிப்பு செய்யப்பட்ட எம் …

Read More »

TSSA UK நடாத்தும் உதைபந்தாட்டத் திருவிழா

தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் TSSA UK நடாத்தும் வருடாந்த உதைபந்தாட்டப் போட்டி நிகழ்வுகளுக்கான பெரும் கொண்டாட்டம் இம்முறையும் வரும் மே மாதம் வரும் வங்கி விடுமுறை திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   மேமாதம் 7ம் திகதி வரும் இந்த உதைபந்தாட்ட கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை அணிகள் பங்குபற்றுவதற்கு தயாராகி வருகின்றன. TSSA UK இன் வெற்றிக்கிண்ணங்களை வெற்றிபெற்று சாதனை அணிகளாக தங்களை நிரூபிக்க அனைத்து அணிகளும் …

Read More »

2018 ம் ஆண்டு நோபலின் இலக்கியத்திற்கான பரிசு கொடுக்கப்படுமா?

வருடாவருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் சுவிடிஷ் அகாடமியின் உயர்மட்ட அங்கத்தவர்களுக்கு இடையே உண்டாகிச் சீழ்ப்பிடித்திருக்கும் பிரச்சினைகளால் அங்கத்தவர்களில் பலர் தங்கள் கடமைகளைச் செய்ய மறுத்து வருகிறார்கள். நிலைமை உடனடியாகச் சீரடையும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதால் இவ்வருடத்துக்கான நோபலில் இலக்கியப் பரிசைக் கொடுப்பதை நிறுத்தலாமா என்ற எண்ணம் உருவாகி வளர்ந்து வருகிறது.     சுவீடனைச் சேர்ந்த அல்பிரட் நோபல் இறக்குமுன்னர் தனது சொத்துக்களை உலகின் முக்கிய துறைகளில் …

Read More »

எச்சரிக்கும் அறிக்கைகள் நிஜமாகுமாகிவிடுமா?

சுற்றுப்புற சூழலைப் பற்றியும், நீண்டகால காலநிலை மாற்றங்கள் பற்றியும் மனித குலத்தை எச்சரிக்கும் பல விஞ்ஞான அறிக்கைகள் சமீப காலமாக வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சமீபத்தில் வளைகுடா நீரோட்ட அமைப்புப் பற்றிய இரண்டு ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்கின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மனிதர் வாழக்கூடியதாக இருப்பதற்குக் காரணம் வளைகுடா நீரோட்ட அமைப்பு. இது the Atlantic meridional overturning circulation (AMOC) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் வெம்மையான பகுதியிலிருந்து நீரை …

Read More »