Wednesday , September 19 2018
Home / சமூகம்

சமூகம்

social

“வி என் மதியழகன் சொல்லும் செய்திகள்” நூல் வெளியீட்டு விழா

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஒலிபரப்பாளர் வி என் மதியழகன் அவர்களது நூல் வெளியீட்டு விழா   23ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் நடை பெற்றது.கனடாவில் இருந்து கொழும்புக்கு வருகைதந்த வி என் மதியழகன் அவர்கள்  குறிப்பிட்ட நூலை வெளியிடுகிறார். “வி என். மதியழகன் சொல்லும் செய்திகள்” என்ற நூலை வெளியிடும் திரு மதியழகன் அவர்கள் இது இலத்திரனியல் தமிழ் ஊடக வாலாற்றின் செய்தித்துறை கருவி …

Read More »

இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கிறதா ஐ.ஒன்றியம்?

மயக்க மருந்து கொடுக்காமல் மிருகங்களை இறைச்சிகாக வெட்டுவதை அனுமதி பெற்ற இறைச்சிக் கடைகளில் மட்டுமே செய்யலாம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியச் சட்டம். அக்காரணத்தால் தங்களது பெருநாள் சமயத்தில் தமது தேவைகளுக்கு இறைச்சி கிடைப்பது தாமதமாகிறது. எனவே அது ஒரு மதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பெல்ஜியத்தில் அண்ட்வெர்ப்பன் நகரசபைக்கு எதிராக அங்கே வாழும் முஸ்லீம்கள் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். இஸ்லாமியப் பெருநாட்கள் நடக்கும் சமயங்களில் தற்காலிகமான இறைச்சி …

Read More »

பங்களாதேஷில் போதை மருந்துகளுக்கெதிரான போர்.

பிலிப்பைன்ஸில் நடப்பதுபோல நடாத்தப்படும் போதைப்பொருட்களுக்கு எதிரான அரச வேட்டையில் கடந்த இரண்டு வாரங்களில் 100 க்கு அதிகமான போதை மருந்து விற்பவர்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக பங்களாதேஷ் பொலீஸ் தெரிவிக்கிறது. 15.06 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளில் சுமார் 12, 000 பேர் கைதுசெய்யப்பட்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் ஆஜராக்கப்பட்டு ஒரு வாரம் முதல் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக நாட்டின் உள்விவகார அமைச்சர் அஸாதுஸ்மான் கான் தெரிவிக்கிறார். கொல்லப்பட்டவர்கள் …

Read More »

கருச்சிதைப்பு அனுமதிக்கப்படலமா? அயர்லாந்து

கருச்சிதைவு செய்துகொள்வது 14 வருடங்கள் சிறைத்தண்டனையைத் தரும் நாடு அயர்லாந்து. இன்று 25.05 அங்கே நடக்கும் வாக்களிப்பில் அவ்விடயம் தீர்மானிக்கப்படும். வருடாவருடம் கர்ப்பமான சுமார் 3 000 அயர்லாந்துப் பெண்கள் பிரிட்டன் சென்று கருக்கலைப்புச் செய்து கொள்கின்றனர். ரோமன் கத்தோலிக்க சமயக் கருத்துக்கள் சமூகத்தில் பலமாக இருக்கும் அயர்லாந்தில் கருக்கலைப்பு ஒரு மிலேச்சத்தனமான செய்கை என்ற கருத்துள்ளவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள். அரசியல்சாசனத்தில் இருக்கும் கருச்சிதைப்பு தடுப்பை எதிர்த்துப் பெரும்பாலானோர் …

Read More »

தென்னாசிய மாணவிகளின் மோசமான நிலைமை

“வோட்டர் எய்ட், யுனிசெப் ஆகிய மனிதாபிமான அமைப்புக்கள் சேர்ந்து நடாத்திய ஆராய்வின்படி தெற்கு ஆசியாவின் மூன்றிலொரு பகுதி மாணவிகள் தமது மாதவிலக்கு காலத்தில் பாடசாலைக்குப் போவதில்லை. அதன் காரணங்களாக இருப்பவை மலசலகூட வசதியின்மையும், பிற்போக்குக் கலாச்சார எண்ணங்களுமே என்று குறிப்பிடப்படுகிறது. சிறீலங்காவின் மூன்றிலிரண்டு பகுதி மாணவிகள் தங்கள் முதலாவது மாதவிலக்கு வரை அது என்னவென்றே அறியாமல் இருக்கிறார்கள்.என்று குறிப்பிடப்படுகிறது. தென் ஆசியாவில் இருக்கும் 1.7 பில்லியன் பாடசாலைகளில் பெரும்பாலானவைகளில் பிள்ளைகளுக்கு …

Read More »

எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் நெதர்லாந்து, சுவீடன், இந்தியா.

இந்தியாவுடன் இணைந்து, நெதர்லாந்தும், சுவீடனும் எய்ட்ஸ் நோய் பற்றியும் அதற்கான மருந்துகள் பற்றியும் ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கின்றன. இந்த மூன்று நாடுகளும் இந்த நோய் பற்றித் தங்களிடம் உள்ள அறிவையும், அனுபவங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும். அதன் மூலம் ஒவ்வொரு நாடும் தன்னிடம் உள்ள திறமையை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும். இப்படியான பகிர்தல்கள் எய்ட்ஸ் நோயைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய்க்காக தற்போது இருக்கும், …

Read More »

கேரளாவில் வைரஸ் பரப்பும் வௌவால்கள்

பழங்களைத் தின்னும் வௌவால்களால் பரப்பப்படும் கிருமியொன்று கேரளாவின் பெரும் பிராந்தியை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் எட்டு இறப்புக்கள், பாதிக்கப்படுகிறவர்களில் 70 விகிதத்தினரின் உயிரைக் குடிக்கும் நிப்பா வைரஸினால் உண்டாக்கப்பட்டவை என்று கருதப்பட்டு அதுபற்றிய விசாரணைகள் நடாத்தப்படுகின்றன. முக்கியமாக கோழிக்கோடு பகுதியில் பெரும் பயத்தை மக்களிடையே இவ்வைரஸ் ஏற்படுத்தியிருப்பதால் இந்திய அரசின் மருத்துவ விற்பன்னர்களை அங்கே அனுப்பியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மனிதர்களையும், மிருகங்களையும் பாதிக்கும் நிப்பா வைரஸ் 1998 இல் …

Read More »

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் மார்க்

அமெரிக்க செனட்டில் கேள்விக்கணைகளால் சில மாதங்களுக்கு முன்பு துளைக்கப்பட்ட பேஸ்புக் அதிபரிடம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் 22.05 செவ்வாயன்று தமது சந்தேகங்களை எழுப்பினார்கள். பேஸ்புக் அதிபர் மார்க் ஸுக்கர்பெர்க் தனது நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் பேஸ்புக் அங்கத்துவர்களின் தனிப்பட்ட விபரங்களைச் சேகரித்து அனுமதியின்றிப் பாவித்துப் பணம் சம்பாதித்தது தெரிந்ததே. அத்துடன் அவர்கள் அவ்விபரங்களை அமெரிக்கா உலகின் வெவ்வேறு பாகங்களில் நடந்த தேர்தல்கள் வேட்பாளர்களிடம் …

Read More »

தமிழ்நாட்டு காவல்துறை அராஜகத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம்

மிலேச்சத்தனமாக  சூடு நடத்தி மக்களை கொன்ற தமிழ்நாட்டு காவல்துறையின்  அராஜக நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் அமைப்புக்களால்  அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் உயிரை தமிழ் காவல்துறையினரே பறித்தெடுக்கும் துர்ப்பாக்கியமான சூழல் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நடந்தேறியிருக்கும் நிலையில் மக்கள் பல ஆயிரமாக கூடி எதிர்ப்பை வெளியிடவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை …

Read More »

பேராயருக்கு ஆஸ்திரேலியா சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பேராயர் பிலிப் வில்ஸன் அடிலெய்ட் நீதிமன்றத்தில் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இவர் சிறார்கள் மீது பாலியல் குற்றங்களைச் செய்த பாதிரியார்களைத் தனது சிறகுக்குள் வைத்துக் காப்பாற்றியதற்காக சிறைக்கனுப்படும் கத்தோலிக்க சமயத்தின் அதிமுக்கிய புள்ளி ஆவார். 1970 களில் ஆஸ்திரேலியாவில் பல சிறார்களைத் தனது பாலியல் இச்சைக்குப் பாவித்தவர் ஜேம்ஸ் பிளெட்சர் என்ற பாதிரியார். 1990 களில் கைது செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவின் பல நீதிமன்றங்களில் இதே …

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com