Monday , October 26 2020
Breaking News
Home / செய்திகள் / தொழிநுட்பம்

தொழிநுட்பம்

முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் அறிமுகம்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் பல்கலைக்கழக பௌதீகவியல் அலகு இயக்குனர்  திரு கணேசநாதன் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. கண்காட்சிப்படுத்துப்பட்ட கார்கள் விசேஷ தனியான வடிவமைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. Jaffna Style Gokart , Solar powered  Baby car,Pedal power car ,Ultralight Pickup எனப் பெயரிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட அந்த கார்கள் அனைத்தும் கண்காட்சியின் ஒரு நிகழ்வாக கார்ப்பவனியாக வலம் வந்தது.சிறுவர்களும் எளிதாக அந்த கார்களை செலுத்திதிருந்தார்கள் என்பது …

Read More »

அண்டார்டிக் பனிமலைத் துண்டங்கள் தென்னாபிரிக்காவுக்கு

தென்னாபிரிக்காவுக்கு  இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கடும் வரட்சி நாட்டின் பல பாகங்களில் நிலத்தடி நீரை வறட்சியடையச் செய்துவிட்டது. முக்கியமாக நாட்டின் தெற்கு, மேற்குப் பிராந்தியங்கள் வறட்சிப் பிரதேசங்களாகக் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. கேப் டவுன்இந்த நூற்றாண்டின் மிகவும் மோசமாக வறட்சியினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அங்கே நீரைப் பாவிப்பதில் மிகவும் கடுமையான சட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன. வரவிருக்கும் மழைக்காலத்தில் தேவையான அளவு மழை கிடைக்காவிட்டால் நகரின் 4 மில்லியன் மக்களுடைய தேவைக்குக் கொடுக்க நகரத்தில் நீர் …

Read More »

யாழ் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி இன்று ஆரம்பமானது. பல்வேறு மருத்துவக் கண்டுபிடிப்புக்களையும் நவீன காலத்தின் மிக முக்கியமான மருத்துவ முறைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்குடனும் மருத்துவம் தொடர்பான அறிவியலை மக்களுக்கு எடுத்துச்செல்லும் நோக்குடனும் வெகுசிறப்பாக ஒழுங்குசெய்யப்படும் இந்த மருத்துவக் கண்காட்சி, இந்தவருடம் யாழ் மருத்துவ பீடத்தின்   40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஆரம்பித்திருக்கும் இந்த மருத்துவக் கண்காட்சி தொடர்ந்து வரும் …

Read More »

தமிழக விஞ்ஞானி தலைமையில் ஏவப்பட்ட செய்மதி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ தமிழகத்தின் தமிழ் விஞ்ஞானி தலைமையில்  விண்ணில் வெற்றிகரமாக  செய்மதியை அனுப்பியுள்ளது.தமிழகத்தின் விஞ்ஞானியான சிவன் அவர்கள் இஸ்ரோவின் தலைமை பொறுப்பை ஏற்றபின் ஏவப்பட்ட முதலாவது செயற்கைகோள் என்று குறிப்பிடப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து சரியாக மாலை 4 மணி 56 நிமிடத்திற்கு வெற்றிகரமாக விண்ணுக்கு சென்றது.ஜிஸாட் 6 A(GSAT-6A) என பெயர் குறிப்பிடப்படும் இந்த செயற்கைகோள் நவீனமயப்படுத்தப்பட்ட  தகவல் தொழில்நுட்ப …

Read More »

சுழலும் கட்டடங்கள் – எதிர்கால கட்டட நிர்மாணம்

எதிர்கால கட்டட நிர்மாணத் துறை எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு விடையாக இந்த கீழே உள்ள ஒளிப்பதிவு வெளியாகியுள்ளது.கட்டட நிர்மாணத்துறையில் ஒரு காலத்தில் தரையோடு மட்டுமே இருந்த கட்டடங்கள், பல்துறை வளர்ச்சியடைந்து புதிய புதிய வடிவங்களில் அழகியலையும் உள்ளடக்கி கட்டடங்களை அமைக்கும் முயற்சிகளில் வெற்றிகண்ட உலகம் இப்போது கட்டடங்கள் சுழன்றால் எப்படியிருக்கும் என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளது.உயர்ந்த மாடிக்கட்டங்களில் ஓரிரண்டு மட்டங்களை சுழல்வதற்கு ஏற்றதாக அமைத்து வெற்றி கண்ட உலக கட்டட …

Read More »

தானியங்கி கார் மோதி அமெரிக்காவில் விபத்து

அமெரிக்காவில், அரிசோனா மாகாணத்தில். உலகின் வெவ்வேறு பாகங்களிலும் பரிசோதனையாக நடந்துவரும் தானே இயங்கும் காரொன்று ஒரு இரவு பாதசாரிகள் வழிச் சந்தியொன்றில் தனது துவிச்சக்கரவண்டியை உருட்டியபடி நடந்துகொண்டிருந்த ஒரு 49 வயதுப் பெண்ணை மோதியது. ஊபர் நிறுவனத்தின் வாகனமொன்றில் ஒரு சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும், அந்த வொல்வோ வாகனம் “தானே இயங்கும் செயலி” மூலம் இயங்கிக்கொண்டிருந்தது.இருப்பினும் அந்த கார் பாதசாரி மீது மோதிவிட்டது.உடனடியாக ஊபர் நிறுவனம் தனது தானே இயங்கும் …

Read More »

பிரான்ஸின் 3D அச்சு இயந்திரத்தால் கட்டி முடிக்கப்பட்ட முதல் வீடு

பிரான்ஸின் நாந்த் மாநிலத்தில் முப்பரிமாண (3D) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ராட்சஸ ரோபோவின் உதவியுடன் ஒரு முழு வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முப்பரிமாண முறையில் அச்சுப் பிரதியெடுத்து கட்டப்படும் வீடுகளின் வகையில் ஃப்ரான்ஸில் இதுவே முதல் வீடு. ஃப்ரான்ஸின் தெற்கு மாநிலமான நாந்த்தில் அமைந்துள்ள “போத்தியர் ” என்ற ஊரில் ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த அச்சுப் பிரதியின் மூலம் கட்டப்படும் வீட்டின் வேலைகள் புதன் கிழமை , …

Read More »

தள்ளி விழுத்தினாலும் விழுந்துவிடாது- தானியங்கும் சைக்கிள்

கூகிள் தயாரிப்பில் அறிமுகமாகிய தானியங்கும் சைக்கிள் சைக்கிள் பாவனையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருபுறம் சைக்கிள் ஓடுவது உடலுக்கு உடற்பயிற்சி என்றும் சூழலுக்கு மாசற்றது என்றும் அதன் பாவனையை ஊக்கப்படுத்தும் ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த சைக்கிளும் அறிமுகமாகியிருக்கிறது. தானாகவே தன்னை சமநிலைப்படுத்துவதும் முன்னாலே ஏதும் தடை வந்தால் நின்று நிதானத்துடன் ஓடுவது இந்த சைக்கிளின் தனியம்சம்.தள்ளினாலும் விழுந்து விடாது எந்த வேகத்தில் குறுகால் எது வந்தாலும் நின்றுவிடும். போக வேண்டிய குறிப்பிட்ட …

Read More »

பிளாஸ்ரிக் போத்தல்களால் உருவான வீடுகள்

பொதுவாக நாம் பார்க்கும் வீடுகளைப்போலவே கட்டப்படும் இந்த வீடுகள் கற்களுக்கு பதிலாக முழுவதும் பிளாஸ்ரிக் போத்தல்களால் ஆனவை. பலருக்கும் ஆச்சரியமளிக்கும் வண்ணம் ஆபிரிக்க நாடுகளில் இந்த முயற்சி வெற்றியளித்திருக்கிறது.பிளாஸ்ரிக்  பாவனையும் , அவை மண்ணோடு   மண்ணாக சேராமல் சூழல் மாசடையும் அச்சம் உலகளவில் வெளியிடப்படும் இந்த காலகட்டங்களில் ஆபிரிக்க கிராமங்களில் எடுக்கப்படும் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. மிகவும் நேர்த்தியுடன் உருவாகும் இந்த வீடுகள் நிறைவில் அழகைத்தருவது இன்னும் சிறப்பு. வீடுகளை …

Read More »