Tuesday , June 18 2019
Home / செய்திகள் (page 5)

செய்திகள்

உரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்

பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகளின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் வட மாகாண சம்பியன் பட்டத்தை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் வெற்றி பெற்றது. 18வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் இந்த வெற்றிச்சாதனையை வட மாகாண மட்டத்தில் சைவத்தமிழ் வித்தியாலயம் பதிவு செய்தது. யாழ் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் இறுதிபோட்டியில் பருத்தித்துறை சென் தோமஸ் கல்லூரி அணியை எதிர்த்து போட்டியிட்ட சைவத்தமிழ் வித்தியாலயம் முதல் சுற்றில் பெற்றிருந்தாலும் இறுதி இரண்டு சுற்றுக்களிலும் விறுவிறுப்பாக …

Read More »

ஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்

ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளரான ஐரோப்பிய ஒன்றியம் 2015 ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுடன் செய்துகொண்ட அணுத் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் ஈரான் தொடரத் தயாராக இருப்பின் ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைத் தொடரத் தயாராக இருப்பதில் உறுதியாக இருப்பதாக அறிவிக்கிறது. அதன்மூலம் 08.05 இல் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்கா அதே ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் அதை மீறும் நாடுகளின் மீது வர்த்தகத் தடை விதிக்கும் என்று அறிவித்ததை …

Read More »

முஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்

பலஸ்தீனர்களின் நிலத்தை இஸ்ராயேல் கைப்பற்றிய 70 வருட ஞாபகார்த்த தினத்தை ஒட்டி காஸாவில் நடந்த துக்ககரமான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி உலக முஸ்லீம் நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து இஸ்ராயேலை எதிர்க்கவேண்டும் என்று அறைகூவுகிறார் துருக்கியத் தலைவர் எர்டகான். தனது நாட்டில் விரைவில் தேர்தலை எதிர்நோக்கும் எர்டகான் “இஸ்லாமிய கூட்டுறவை அமைப்பு நாடுகளின்” மாநாட்டில் பேசும்போது “இஸ்ரேயேலிய ஆக்கிரமிப்பாளர்கள் பலஸ்தீனர்கள் மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்களை எதிர்ப்பதன் மூலம் உலகின் மனிதாபிமானம் ஒழிந்துபோகவில்லை என்று …

Read More »

சிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்

சிலி நாட்டின் ஒவ்வொரு மேற்றிராணியார்களும் தங்கள் இடத்தைக் காலி செய்ய முன்வந்திருக்கின்றனர். காரணம் கத்தோலிக்க திருச்சபைக்குள் நீண்ட காலமாக நடந்துவந்த சிறார் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களும் அவைகளைப் பாப்பாண்டவர் உட்பட்ட சகல உயர்மட்டத்தினரும் மூடி மறைக்க முற்பட்டதும் ஆகும். பதவியிலிருக்கும் 31 மேற்றிராணியார்களும், ஓய்வுபெற்ற 3 மேற்றிராணியார்கலும் தங்கள் ராஜினாமாவுக்கான கையெழுத்துக்களை பாப்பரசரிடம் கையளித்திருக்கின்றனர். சரித்திர ரீதியாக ஒரு நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்டத்தினர் சகலரும் கூடிய மாநாட்டில் இப்படி …

Read More »

ஈராக்கிய தேர்தல் முடிவுகள்

அமெரிக்க ஆதரவாளரும், ஈரானின் அரசியல் ஈராக்குக்குள் நுழைவதை விரும்பாதவருமான ஷீயா – இஸ்லாம் மார்க்கத் தலைவரான மொக்தடா அல்-சாதிர் அணி கடந்த வாரம் ஈராக்கில் நடந்த பொதுத் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்படுகிறது. அல்-சாதிர் அணியினரின் 54 இடங்களுக்கு அடுத்ததாக ஈரான் ஆதரவு அரசியல் அணி 47 இடங்களையும், ஈராக் பிரதமரின் அரசியல் அணி 42 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. ஆன்மீகத் தலைவரான அல்-சாதிர் வேட்பாளராக எத் தொகுதியிலும் நிற்காததால் அவர் பிரதமராகப் …

Read More »

காஸா எல்லைக்குப் போகும் ஹமாஸ் தலைவர்

காஸாவின் இஸ்ராயேல் எல்லையில் சுமார் ஏழு வாரங்களாக நடத்தப்பட்டுவந்த எதிர்ப்புப் பேரணிகளைத் தனதாக்கிப் பல இளவயதினரை இஸ்ராயேலின் இராணுவத்துக்குக் காவு கொடுத்தார்கள் ஹமாஸ் இயக்கத்தினர். அதன் உச்சக்கட்டமாக ஜெருசலேமில் அமெரிக்கத் தூதுவராலயம் திறக்கப்பட்ட திங்களன்று 60 பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆயிரத்துக்கும் மேலானோர் காயமுற்றனர். சர்வதேசத்துக்குக் காட்டுவதற்காக வேண்டுமென்றே காஸாவின் இளையவர்களைக் ஹமாஸ் தூண்டிக் கொலைக்கு அனுப்பியதைத் தவிர வேறெந்த நன்மையும் அதனால் விளையவில்லை என்ற கருத்தே பெரும்பாலானோர்களிடம் நிலவிவருகிறது. …

Read More »

தமது வீடுகளுக்குத் திரும்பிய 350 குடும்பங்கள்

சிறீ லங்காவில் போர் முடிந்த பின்பு முதல் தடவையாக இராணுவம், கடற்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதியொன்றை அங்கே ஏற்கனவே வாழ்ந்த மக்கள் தம் வசப்படுத்தியிருக்கிறார்கள். இரணைதீவுப் பிரதேசத்தில் 26 வருடங்களுக்கு முன்பு தங்களிடமிருந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை சுமார் 350 குடும்பத்தினர் கைப்பற்றினர். மூன்று வாரங்களின் பின்பு 15ம் திகதியன்று அரசு அதை ஏற்றுக்கொண்டு அக்குடும்பத்தினர்களின் பிரதிநிதிகளிடம் அங்கே வாழ்வதற்கான அனுமதியை வழங்கியது.

Read More »

வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வட கொரிய அதிபர் கிம் யொங் உன் தனது பதவியில் இருக்கவேண்டுமானால் நாட்டின் அணு ஆயுத ஆராய்ச்சிகளை நிறுத்திவிடவேண்டும் இல்லையெனில் லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட நிலைமையே அவருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கிறார் டொனால்ட் டிரம்ப். திட்டமிட்டபடி வரவிருக்கும் அமெரிக்க – வட கொரிய அதிபர்கள் சந்திப்பு நடந்து அதன்மூலம் ஒரு நல்ல ஒப்பந்தம் உண்டாகுமானால், வட கொரியாவை ஒரு சுபீட்ச நாடாக மாற்ற கிம் யொங் உன்னுக்கு அமெரிக்கா சகல …

Read More »

வேகமாக உயரும் எண்ணெய் விலை

ஒபெக் அமைப்புக்குள்ளும் வெளியே இருக்கும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு இன்றுத் தேவையான எண்ணெயைச் சந்தைக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு உலகச் சந்தையில் எண்ணெய் விலை விழுந்துகொண்டிருப்பதைத் தடுக்க சவூதி அரேபியா மிகவும் பிரயத்தனப்பட்டுப் ரஷ்யா உட்பட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தித் தமது எண்ணெய்த் தயாரிப்பைக் குறைத்துக்கொண்டன. இதன் விளைவாகவே சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து பெற்றோலியத்தின் …

Read More »

வெனிசூலாவும் ஜனாதிபதித் தேர்தலும்

20\05 ஞாயிறன்று வெனிசுவேலாவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என்றே பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் முக்கியமானவர்களையெல்லாம் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்துவிட்டு நாட்டின் ஜனாதிபதி நிக்கலோஸ் மதூரோ அறிவித்திருக்கும் தேர்தலின் காரணம் தனது பதவியின் அதிகாரங்களை அதிகரித்துக்கொண்டு அதன் மூலம் தன்னை நிலையான ஒரு சர்வாதிகாரியாகிக் கொள்வதே என்று பலரும் சந்தேகப்படுகிறார்கள். அதேசமயம் மதுரோவின் ஆட்சியை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற குறிக்கோளை எதிர்க் கட்சிகள் கொண்டிருந்தாலும் தங்களுக்குள் …

Read More »