Tuesday , June 18 2019
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கென ஒற்றைப் பொருளாதாரம்!

பிரெஞ்ச் ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஒற்றைப் பொருளாதார வலயமாக்கும் எதிர்காலத் திட்டம் ஒன்றை முன்வைத்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஒரு வரவு செலவுத் திட்டத்தையும், ஒரு பொருளாதார அமைச்சையும் உண்டாக்கி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் நிதியை ஐரோப்பிய பணக் கஜானாவாக மாற்றுவதே ஜனாதிபதி மக்ரோனின் திட்டம். “அவரது திட்டம் மிகவும் ஆபத்தானது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பொருளாதார வலயமாக ஒன்றிணைப்பதை நாம் …

Read More »

தமிழ்நாட்டு காவல்துறை அராஜகத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம்

மிலேச்சத்தனமாக  சூடு நடத்தி மக்களை கொன்ற தமிழ்நாட்டு காவல்துறையின்  அராஜக நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் அமைப்புக்களால்  அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் உயிரை தமிழ் காவல்துறையினரே பறித்தெடுக்கும் துர்ப்பாக்கியமான சூழல் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நடந்தேறியிருக்கும் நிலையில் மக்கள் பல ஆயிரமாக கூடி எதிர்ப்பை வெளியிடவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை …

Read More »

இத்தாலியில் அரசாங்கம் அமையலாம்

இத்தாலியில் எதிரும் புதிருமாக நின்றுகொண்டிருந்த  கட்சிகள் ஒரு வழியாகப் புதிய தேர்தலொன்றை எதிர்நோக்காமல் அரசொன்றை அமைக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். குசேப்பெ கொண்டே என்ற 54 வயதான, அதிக பிரபலமில்லாத சட்ட வல்லுனர் ஒருவரை நடந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறாத கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமராகப் பிரேரிக்கின்றன. குசேப்பெயைப் பிரதமராக அங்கீகரிப்பது பற்றி பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளின் முக்கியத்தஸ்தர்களுடனும் நாட்டின் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறார். இத்தாலியின் புதுக் கட்சியும், வலது சாரி …

Read More »

அமெரிக்க மிரட்டலுக்கு ஈரான் பதில்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் –  ஈரான் தொடர்ந்தும் வர்த்தகத் தொடர்புகளைப் பேணும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதே தருணம், நேற்று அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் “எந்த நாட்டின் மீதும் போடப்பட்டிராத வர்த்தகத் தடைகளை நாம் ஈரான் மீது போடுவோம்,” என்று மிரட்டியிருக்கிறார். “ஈரான் மீதோ, ஐரோப்பா மீதோ கட்டுப்பாடுகளைத் திணிக்க நீங்கள் யார்? அமெரிக்கர்கள் இஷ்டப்படி எல்லார் மீதும் சட்டங்கள் போடுவதை இனிமேலும் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை,” என்று பதிலுக்குச் சாடுகிறார் …

Read More »

பேராயருக்கு ஆஸ்திரேலியா சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பேராயர் பிலிப் வில்ஸன் அடிலெய்ட் நீதிமன்றத்தில் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இவர் சிறார்கள் மீது பாலியல் குற்றங்களைச் செய்த பாதிரியார்களைத் தனது சிறகுக்குள் வைத்துக் காப்பாற்றியதற்காக சிறைக்கனுப்படும் கத்தோலிக்க சமயத்தின் அதிமுக்கிய புள்ளி ஆவார். 1970 களில் ஆஸ்திரேலியாவில் பல சிறார்களைத் தனது பாலியல் இச்சைக்குப் பாவித்தவர் ஜேம்ஸ் பிளெட்சர் என்ற பாதிரியார். 1990 களில் கைது செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவின் பல நீதிமன்றங்களில் இதே …

Read More »

வெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி!

பலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 48 விகிதத்தினர் வாக்களித்ததாகவும் அவற்றில் 68 விகிதமானவை மதூரோவுக்குச் சார்பாகவும் இருந்ததாகவும் அறியப்படுத்தப்படுகிறது. தேர்தல் நாளுக்கு முன்பே வாக்காளர்கள் மீது போடப்பட்ட கண்காணிப்புக்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஒடுக்கியவை, மற்றும் இலவச விநியோகங்களால் தேர்தல் பிரச்சாரம் நியாயமான முறையில் நடாத்தப்படவில்லை என்று கண்காணிப்பு அமைப்புக்களாலும், சர்வதேச ரீதியிலும் குற்றஞ்சாட்டப்பட்டது. அதேபோலவே …

Read More »

அமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு

இரண்டு நாட்களாக சீன – அமெரிக்க வர்த்தகம் பற்றிய உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்பு “நாம் எமது பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் கண்டிருப்பதால் எங்களுக்குள் ஆரம்பிக்கவிருந்த வர்த்தகப் போரை இப்போதைக்குத் தள்ளிவைத்திருக்கிறோம்,” என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்டீவன் ம்னூச்சன் தெரிவித்திருக்கிறார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்போதுள்ள வர்த்தகத்தில் சீனாவுடைய உபரி மதிப்பைக் குறைக்க சீனா முழுவதுமாக ஒத்துக்கொள்ளாவிடினும், காலப்போக்கில் அமெரிக்காவின் பொருட்களைச் சீனா வாங்குவதை அதிகரிக்கும் விதமான நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தை நகர்வதாக …

Read More »

ஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி

அமெரிக்கா கைகழுவிவிட்ட ஈரானின் அணுத் தொழில் நுட்ப ஒப்பந்தத்தைப் பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் செய்வது போதாது என்று குற்றம் சாட்டுகிறார் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முஹம்மது யவாத் ஷரிப். இதை அவர் ஈரானில் தன்னைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய மின்சக்தி தலைவரிடம் தெரிவித்தார். “அந்த ஒப்பந்தத்தை நாம் தொடர்ந்து பேணவேண்டும். அதன்மூலம் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கும் தேவை இல்லாது போகும். ஈரானுடனான ஒப்பந்தம் வேலை செய்கிறது என்பதே எங்கள் தெளிவான …

Read More »

சர்வதேச தேனீக்கள் தினம் 20\06

ஐ.நா-வின் உணவு ஸ்தாபனமும், ஐரோப்பிய ஒன்றியமும் சேர்ந்து மகரந்தம் பரப்புகிறவர்களைக் காப்பாற்றுங்கள், என்று குரல் கொடுத்திருக்கின்றன. முக்கியமாக தேனிக்களின் அழிவை நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சுட்டிக் காட்டுகின்றன. “தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், சிறு குருவிகள், வண்டுகள், வௌவால்கள் போன்றவையே எமக்குத் தேவையான உணவை இயற்கையில் தயாரிப்பதற்கு முக்கியமானவையாக இருக்கின்றன. இந்த மகரந்தம் பரப்பும் உயிரினங்கள் இல்லையென்றால் எமது உணவுத் தயாரிப்பு நடக்காது,” என்கிறார் ஐ.நா- உணவு அமைப்பின் தலைவர் ஹோஸே கிரசியானோ …

Read More »

சர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி

சர்வதேச கபடி போட்டியில் பங்குபற்றுவதற்கு வடமாகாணத்திலிருந்து மிகச்சிறந்த அணியொன்று பங்குபற்றவுள்ளது. வடமாகாண அனைத்து மாவட்டகளிலிருந்தும் இதற்கு முன்னர்  நடைபெற்ற போட்டிகளிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட மிகத்திறன் வாய்ந்த அணிவீரர்களை உள்ளடக்கியதாக கபடி அணி உருவாக்கப்பட்டுள்ளது. பல  முன்னணி கழகங்களிலிருந்தும் பல அணிவீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. சிங்கப்பூரில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச சுற்றுப் போட்டிகளில் இந்தியா,மலேசியா,மாலைதீவுகள் ,நியூசிலாந்து, பூட்டான் போன்ற நாடுகள் இந்த கபடிப்போட்டிகளில் மோதவுள்ளது.   அண்மைய நாள்களில் …

Read More »