Monday , June 17 2019
Home / செய்திகள் (page 3)

செய்திகள்

இத்தாலிக்கு ஒரு சுத்தமான புதுப் பிரதமர்

பொதுத் தேர்தல் நடந்து இரண்டு மாதங்களாக இழுபறியில் இருந்த இத்தாலியில் புதிய பிரதமர் குசேப்பெ கொன்தெ என்ற சட்ட வல்லுனர் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். தனது நாட்டு மக்களுக்கான முதலாவது செய்தியில் “நான் இத்தாலியின் சகலருக்குமான வழக்கறிஞராக இருக்க விரும்புகிறேன். எங்கள் நாட்டுக்கென்று ஒரு முக்கிய இடம் ஐரோப்பாவில் இருக்கிறது,” என்று தெரிவித்திருக்கிறர் குசேப்பெ கொன்தெ. இவரைத் தெரிந்தெடுத்த 5 நட்சத்திரக் கட்சியும், லா லீகா அணியும் ஏற்கனவே இத்தாலியில் இருந்த …

Read More »

மேலுமொரு சர்வதேச ஒப்பந்தத்தில் பலஸ்தீனர்கள்

உலகில் இரசாயண ஆயுதங்களைப் பரவாமல் இருக்கத் தடுக்கும் ஐ.நா வின் ஒப்பந்தத்தில் பலஸ்தீனர்கள் [23.05] நேற்றுக் கைச்சாத்திருக்கிறார்கள். தனியாகப் பலஸ்தீனா என்ற நாடு உருவாகாத பட்சத்திலும் ஐ.நா வின் பொதுச் சபையில் பலஸ்தீனா ஒரு விருந்தினர் ஸ்தானத்தில் பங்கெடுத்து வருகிறது. அதன்மூலம் ஐ.நா வின் சர்வதேச ஒப்பந்தங்களில் பங்கெடுக்க இடங்கொடுக்கப்படுகிறது. பலஸ்தீனாவை அப்படியான ஒப்பந்தங்களில் சேர்த்துக்கொண்டால் குறிப்பிட்ட ஐ.நா வின் அமைப்புக்களுக்கு அமெரிக்கா தனது பங்கு உதவித்தொகையைக் கொடுக்காது என்று …

Read More »

வேகமாகக் கவிழும் துருக்கிய லிரா

துருக்கியின் நாணயமான லிரா மிகவும் வேகமாகத் தனது பெறுமதியை உலகச் சந்தையில் இழந்து வருகிறது. இன்று புதன்கிழமை மட்டுமே டொலருக்கு எதிராக 5 விகிதப் பெறுமதியை இழந்த துருக்கிய லிரா இவ்வருட ஆரம்பத்திலிருந்து 20 விகிதப் பெறுமதியால் குறைந்துவிட்டிருக்கிறது. லிராவின் வீழ்ச்சியைக் கவனித்துக்கொண்டு வரும் பொருளாதார விற்பன்னர்கள் அடுத்தடுத்த வாரங்களிலும் அது தலா ஐந்து விகிதங்கள் பெறுமதியை இழக்கும் என்று ஆரூடம் கூறுகிறார்கள். அடுத்த மாதம் 7ம் திகதி துருக்கிய …

Read More »

தென்னாசிய மாணவிகளின் மோசமான நிலைமை

“வோட்டர் எய்ட், யுனிசெப் ஆகிய மனிதாபிமான அமைப்புக்கள் சேர்ந்து நடாத்திய ஆராய்வின்படி தெற்கு ஆசியாவின் மூன்றிலொரு பகுதி மாணவிகள் தமது மாதவிலக்கு காலத்தில் பாடசாலைக்குப் போவதில்லை. அதன் காரணங்களாக இருப்பவை மலசலகூட வசதியின்மையும், பிற்போக்குக் கலாச்சார எண்ணங்களுமே என்று குறிப்பிடப்படுகிறது. சிறீலங்காவின் மூன்றிலிரண்டு பகுதி மாணவிகள் தங்கள் முதலாவது மாதவிலக்கு வரை அது என்னவென்றே அறியாமல் இருக்கிறார்கள்.என்று குறிப்பிடப்படுகிறது. தென் ஆசியாவில் இருக்கும் 1.7 பில்லியன் பாடசாலைகளில் பெரும்பாலானவைகளில் பிள்ளைகளுக்கு …

Read More »

எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் நெதர்லாந்து, சுவீடன், இந்தியா.

இந்தியாவுடன் இணைந்து, நெதர்லாந்தும், சுவீடனும் எய்ட்ஸ் நோய் பற்றியும் அதற்கான மருந்துகள் பற்றியும் ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கின்றன. இந்த மூன்று நாடுகளும் இந்த நோய் பற்றித் தங்களிடம் உள்ள அறிவையும், அனுபவங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும். அதன் மூலம் ஒவ்வொரு நாடும் தன்னிடம் உள்ள திறமையை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும். இப்படியான பகிர்தல்கள் எய்ட்ஸ் நோயைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய்க்காக தற்போது இருக்கும், …

Read More »

குறைந்த சம்பளத்தில் புதிய மலேசிய அமைச்சரவை!

மலேசியத் தேர்தலில் வெற்றி பெற்ற மஹாதிர் முகம்மது 21.05 திங்களன்று தான் உறுதியளித்தபடியே முன்பிருந்ததை விடச் சிறிய அமைச்சரவை ஒன்றை அறிவித்தார். 25 அங்கத்தினர்களைக் கொண்ட அமைச்சரவை 13 ஆகக் குறைந்திருக்கிறது. மலேசியாவின் துணை அமைச்சர் பதவி மஹாதிர் முஹம்மது ஒரு வாரத்துக்கு முன்னர் சிறையிலிருந்து விடுவித்த அரசியல்வாதி அன்வர் இப்ராஹிமின் மனைவி டாடுக் ஸெரி வான் அஸீசாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மஹாதிர் முஹம்மதுவின் மிக நெருங்கிய அரசியல் தோழராக இருந்து …

Read More »

தேர்தல்கள் நடத்தக் கோரிப் போராடும் தாய்லாந்தர்கள்

“மீண்டும் ஜனநாயகம் வேண்டும்” என்ற தாய்லாந்தின் அரசியல் அமைப்பு நாட்டில் பேரணிகளை நடத்தி ஆட்சியில் இருக்கும் இராணுவத்தினர் ஏற்கனவே உறுதியளித்திருப்பது போல இவ்வருடக் கடைசிக்கு முன்பு பொதுத் தேர்தல் நடாத்தவேண்டும் என்று கோருகின்றன. சுமார் 4 வருடங்களுக்கு முன்பு தாய்லாந்தில் இருந்த அரசு கவிழ்க்கப்பட்டு நாட்டின் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து மனித உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டு ஒரு சர்வாதிகார அமைப்பே நாட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஏற்கனவே திட்டமிடப்பட்டு …

Read More »

கேரளாவில் வைரஸ் பரப்பும் வௌவால்கள்

பழங்களைத் தின்னும் வௌவால்களால் பரப்பப்படும் கிருமியொன்று கேரளாவின் பெரும் பிராந்தியை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் எட்டு இறப்புக்கள், பாதிக்கப்படுகிறவர்களில் 70 விகிதத்தினரின் உயிரைக் குடிக்கும் நிப்பா வைரஸினால் உண்டாக்கப்பட்டவை என்று கருதப்பட்டு அதுபற்றிய விசாரணைகள் நடாத்தப்படுகின்றன. முக்கியமாக கோழிக்கோடு பகுதியில் பெரும் பயத்தை மக்களிடையே இவ்வைரஸ் ஏற்படுத்தியிருப்பதால் இந்திய அரசின் மருத்துவ விற்பன்னர்களை அங்கே அனுப்பியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மனிதர்களையும், மிருகங்களையும் பாதிக்கும் நிப்பா வைரஸ் 1998 இல் …

Read More »

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் மார்க்

அமெரிக்க செனட்டில் கேள்விக்கணைகளால் சில மாதங்களுக்கு முன்பு துளைக்கப்பட்ட பேஸ்புக் அதிபரிடம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் 22.05 செவ்வாயன்று தமது சந்தேகங்களை எழுப்பினார்கள். பேஸ்புக் அதிபர் மார்க் ஸுக்கர்பெர்க் தனது நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் பேஸ்புக் அங்கத்துவர்களின் தனிப்பட்ட விபரங்களைச் சேகரித்து அனுமதியின்றிப் பாவித்துப் பணம் சம்பாதித்தது தெரிந்ததே. அத்துடன் அவர்கள் அவ்விபரங்களை அமெரிக்கா உலகின் வெவ்வேறு பாகங்களில் நடந்த தேர்தல்கள் வேட்பாளர்களிடம் …

Read More »

இத்தாலிய அரசியலில் தொடரும் சர்ச்சைகள்!

இத்தாலியத் தேர்தலில் வெற்றிபெற்ற இரண்டு அணிகளினால் பிரதமராகப் பிரேரணை செய்யப்பட்ட பலரால் அறியப்படாத சட்ட வல்லுனர் குயிசெப்பே கொம்தெ தான் பெற்றிராத சர்வதேசப் பட்டங்களைப் பொய்யாகக் குறிப்பிட்டதாகக் குற்றஞ்சுமத்தப்படுகிறார். பாரம்பரிய அரசியல் கட்சிகளை எதிர்த்துத் தொடங்கப்பட்ட 5 நட்சத்திர அமைப்பே கொம்தெயைப் பிரதமராக முதலில் பிரேரித்தது. கேம்பிரிட்ஜ், பரிஸ் ஸொர்போன், நியூ யோர்க் பல்கலைக்கழகங்களில் கொம்தெ சட்ட வல்லுனர் பட்டங்கள் பெற்றதாகக் கூறப்படுவது உண்மையா என்பது பற்றிய சந்தேகம் பலராலும் …

Read More »