Tuesday , January 22 2019
Home / செய்திகள் (page 2)

செய்திகள்

பிரிட்டனுக்கென்று தனியாக செயற்கைக் கோள் திட்டமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து ஸ்தாபித்த கலிலியோ என்ற செயற்கைக் கோள் ஆராய்ச்சித் திட்டத்தில் முதலீடு செய்த சுமார் 1 பில்லியன் பவுண்டுகளைத் திரும்பக் கோரும் என்று பிரிட்டிஷ் வர்த்தக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். காரணம் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து பிரிட்டன் கலிலியோ திட்டத்தில் இருந்து பயன்பெறுவதைத் தடுக்கும் என்று குறிப்பிட்டிருப்பதாகும். பிரிட்டன், ஐ ஒன்றியத்திலிருந்து வெளியேறும்போது கொடுக்கப்படவேண்டிய நஷ்ட ஈடுகள், விலகியபின் எப்படியான தொடர்புகள் வைத்திருக்கப்படும் போன்றவை …

Read More »

கருச்சிதைப்பு அனுமதிக்கப்படலமா? அயர்லாந்து

கருச்சிதைவு செய்துகொள்வது 14 வருடங்கள் சிறைத்தண்டனையைத் தரும் நாடு அயர்லாந்து. இன்று 25.05 அங்கே நடக்கும் வாக்களிப்பில் அவ்விடயம் தீர்மானிக்கப்படும். வருடாவருடம் கர்ப்பமான சுமார் 3 000 அயர்லாந்துப் பெண்கள் பிரிட்டன் சென்று கருக்கலைப்புச் செய்து கொள்கின்றனர். ரோமன் கத்தோலிக்க சமயக் கருத்துக்கள் சமூகத்தில் பலமாக இருக்கும் அயர்லாந்தில் கருக்கலைப்பு ஒரு மிலேச்சத்தனமான செய்கை என்ற கருத்துள்ளவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள். அரசியல்சாசனத்தில் இருக்கும் கருச்சிதைப்பு தடுப்பை எதிர்த்துப் பெரும்பாலானோர் …

Read More »

மீடூ அலை மோர்கன் ப்ரீமனையும் தாக்குகிறது

பிரபல அமெரிக்க நடிகர் மோர்கன் ப்ரீமன் தங்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், தொல்லைகள் கொடுத்ததாகவும் 16 பெண்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். 2017 ம் ஆண்டு முதல் மீடூ என்ற பெண்கள் குற்றச்சாட்டு அலை ஆரம்பித்தது முதல் பிரபல நடிகர்கள் உட்பட உலகின் அதிகாரத்தில் இருந்த ஆண்கள் பலரும் குற்றஞ்சாட்டப்பட்டுப் பெரும்பான்மையானவர்கள் விலாசம் தெரியாமலே போய்விட்டார்கள். தற்போது 80 வயதான மோர்கன் ப்ரீமன் சுமார் 50 வருடங்களாக ஹோலிவூட்டில் கோலோச்சி வருபவர், 2005 …

Read More »

வட கொரியா – அமெரிக்கா சந்திப்பு நடக்காது!

“சரித்திரத்தில் ஒரு வேதனையான நிகழ்வு,” என்று சொல்லி 12.06 இல் சிங்கப்பூரில் வட கொரிய அதிபருடன் திட்டமிட்ட தனது சந்திப்பை நிறுத்திவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிக்கிறார். “நீங்கள் சமீபத்தைய அறிக்கைகளில் காட்டிவரும் வெறுப்பும், விரோத மனப்பான்மையும் நாங்கள் திட்டமிட்டிருந்த நேரடிச் சந்திப்பை இப்போதைக்கு நடாத்துவது பிரயோசனமில்லை என்று காட்டுகிறது,” என்று கிம் யொங் உன்னுக்கு வெள்ளை மாளிகையிலிருந்து அதிகாரபூர்வமாகச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு தென் …

Read More »

இத்தாலிக்கு ஒரு சுத்தமான புதுப் பிரதமர்

பொதுத் தேர்தல் நடந்து இரண்டு மாதங்களாக இழுபறியில் இருந்த இத்தாலியில் புதிய பிரதமர் குசேப்பெ கொன்தெ என்ற சட்ட வல்லுனர் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். தனது நாட்டு மக்களுக்கான முதலாவது செய்தியில் “நான் இத்தாலியின் சகலருக்குமான வழக்கறிஞராக இருக்க விரும்புகிறேன். எங்கள் நாட்டுக்கென்று ஒரு முக்கிய இடம் ஐரோப்பாவில் இருக்கிறது,” என்று தெரிவித்திருக்கிறர் குசேப்பெ கொன்தெ. இவரைத் தெரிந்தெடுத்த 5 நட்சத்திரக் கட்சியும், லா லீகா அணியும் ஏற்கனவே இத்தாலியில் இருந்த …

Read More »

மேலுமொரு சர்வதேச ஒப்பந்தத்தில் பலஸ்தீனர்கள்

உலகில் இரசாயண ஆயுதங்களைப் பரவாமல் இருக்கத் தடுக்கும் ஐ.நா வின் ஒப்பந்தத்தில் பலஸ்தீனர்கள் [23.05] நேற்றுக் கைச்சாத்திருக்கிறார்கள். தனியாகப் பலஸ்தீனா என்ற நாடு உருவாகாத பட்சத்திலும் ஐ.நா வின் பொதுச் சபையில் பலஸ்தீனா ஒரு விருந்தினர் ஸ்தானத்தில் பங்கெடுத்து வருகிறது. அதன்மூலம் ஐ.நா வின் சர்வதேச ஒப்பந்தங்களில் பங்கெடுக்க இடங்கொடுக்கப்படுகிறது. பலஸ்தீனாவை அப்படியான ஒப்பந்தங்களில் சேர்த்துக்கொண்டால் குறிப்பிட்ட ஐ.நா வின் அமைப்புக்களுக்கு அமெரிக்கா தனது பங்கு உதவித்தொகையைக் கொடுக்காது என்று …

Read More »

வேகமாகக் கவிழும் துருக்கிய லிரா

துருக்கியின் நாணயமான லிரா மிகவும் வேகமாகத் தனது பெறுமதியை உலகச் சந்தையில் இழந்து வருகிறது. இன்று புதன்கிழமை மட்டுமே டொலருக்கு எதிராக 5 விகிதப் பெறுமதியை இழந்த துருக்கிய லிரா இவ்வருட ஆரம்பத்திலிருந்து 20 விகிதப் பெறுமதியால் குறைந்துவிட்டிருக்கிறது. லிராவின் வீழ்ச்சியைக் கவனித்துக்கொண்டு வரும் பொருளாதார விற்பன்னர்கள் அடுத்தடுத்த வாரங்களிலும் அது தலா ஐந்து விகிதங்கள் பெறுமதியை இழக்கும் என்று ஆரூடம் கூறுகிறார்கள். அடுத்த மாதம் 7ம் திகதி துருக்கிய …

Read More »

தென்னாசிய மாணவிகளின் மோசமான நிலைமை

“வோட்டர் எய்ட், யுனிசெப் ஆகிய மனிதாபிமான அமைப்புக்கள் சேர்ந்து நடாத்திய ஆராய்வின்படி தெற்கு ஆசியாவின் மூன்றிலொரு பகுதி மாணவிகள் தமது மாதவிலக்கு காலத்தில் பாடசாலைக்குப் போவதில்லை. அதன் காரணங்களாக இருப்பவை மலசலகூட வசதியின்மையும், பிற்போக்குக் கலாச்சார எண்ணங்களுமே என்று குறிப்பிடப்படுகிறது. சிறீலங்காவின் மூன்றிலிரண்டு பகுதி மாணவிகள் தங்கள் முதலாவது மாதவிலக்கு வரை அது என்னவென்றே அறியாமல் இருக்கிறார்கள்.என்று குறிப்பிடப்படுகிறது. தென் ஆசியாவில் இருக்கும் 1.7 பில்லியன் பாடசாலைகளில் பெரும்பாலானவைகளில் பிள்ளைகளுக்கு …

Read More »

எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் நெதர்லாந்து, சுவீடன், இந்தியா.

இந்தியாவுடன் இணைந்து, நெதர்லாந்தும், சுவீடனும் எய்ட்ஸ் நோய் பற்றியும் அதற்கான மருந்துகள் பற்றியும் ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கின்றன. இந்த மூன்று நாடுகளும் இந்த நோய் பற்றித் தங்களிடம் உள்ள அறிவையும், அனுபவங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும். அதன் மூலம் ஒவ்வொரு நாடும் தன்னிடம் உள்ள திறமையை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும். இப்படியான பகிர்தல்கள் எய்ட்ஸ் நோயைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய்க்காக தற்போது இருக்கும், …

Read More »

குறைந்த சம்பளத்தில் புதிய மலேசிய அமைச்சரவை!

மலேசியத் தேர்தலில் வெற்றி பெற்ற மஹாதிர் முகம்மது 21.05 திங்களன்று தான் உறுதியளித்தபடியே முன்பிருந்ததை விடச் சிறிய அமைச்சரவை ஒன்றை அறிவித்தார். 25 அங்கத்தினர்களைக் கொண்ட அமைச்சரவை 13 ஆகக் குறைந்திருக்கிறது. மலேசியாவின் துணை அமைச்சர் பதவி மஹாதிர் முஹம்மது ஒரு வாரத்துக்கு முன்னர் சிறையிலிருந்து விடுவித்த அரசியல்வாதி அன்வர் இப்ராஹிமின் மனைவி டாடுக் ஸெரி வான் அஸீசாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மஹாதிர் முஹம்மதுவின் மிக நெருங்கிய அரசியல் தோழராக இருந்து …

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com