Monday , July 13 2020
Home / செய்திகள் / சினிமா

சினிமா

13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று

நோர்வே நாட்டில் உருவாக்கப்பட்ட நோர்வே தமிழ் பிக்சேர்ஸ் வழங்கும் 13 + to hell திரைப்படம் இன்று ஞாயிற்றுக்கிழமை (24:2:2019) பிற்பகல் 4:30 மணிக்கு ராஜா 2 திரையரங்கில் திரையிடப்படவுளளது. ஐரோப்பியக் கலைஞர்கள் பலரும் பங்கெடுத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தொலைந்து போன நிஜத்தின் தேடல் என்று உப தலைப்பு இடப்பட்டிருக்கிறது. முற்றிலும் இலவச காட்சியாகக் காண்பிக்கப்பட இருக்கும் இந்த திரைப்படத்தை எம் மக்கள் பலரும் வந்து பார்வையிட்டு எம் கலைஞர்களுக்கு …

Read More »

பரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்

திரையுலப்பிரமுகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் பலராலும் பார்க்கப்பட்ட பாராட்டப்பட்ட , திரைப்பட இயக்குனர் செழியனின் டூ லெட் To Let திரைப்படம் பரீஸ் மாநகரத்தின் திரை அரங்கிற்கும் மக்கள் பார்வைக்காக திரையிடப்படவிருக்கிறது. பெரு நகரத்தில் சிறு கனவை எளிமையான சினிமாவாக பிரமாண்டமான திரை அரங்கத்துக்குள் கொண்டு வந்ததில் செழியன் வெற்றிபெற்றிருப்பதாக பலரும் பாராட்டுவதை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. திரைப்படங்களுக்கு இருக்கவேண்டிய பிரமாண்டமாக, அதனோடு இணைந்து திரைக்கதையின் முக்கியத்துவத்துவத்தை உணர்ந்த செழியன் …

Read More »

மீடூ அலை மோர்கன் ப்ரீமனையும் தாக்குகிறது

பிரபல அமெரிக்க நடிகர் மோர்கன் ப்ரீமன் தங்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், தொல்லைகள் கொடுத்ததாகவும் 16 பெண்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். 2017 ம் ஆண்டு முதல் மீடூ என்ற பெண்கள் குற்றச்சாட்டு அலை ஆரம்பித்தது முதல் பிரபல நடிகர்கள் உட்பட உலகின் அதிகாரத்தில் இருந்த ஆண்கள் பலரும் குற்றஞ்சாட்டப்பட்டுப் பெரும்பான்மையானவர்கள் விலாசம் தெரியாமலே போய்விட்டார்கள். தற்போது 80 வயதான மோர்கன் ப்ரீமன் சுமார் 50 வருடங்களாக ஹோலிவூட்டில் கோலோச்சி வருபவர், 2005 …

Read More »

“சிம்ப்ஸன்ஸ்” தொடரும் நிறவாதக் குற்றச்சாட்டும்

அணுமின்சார நிலையத்தில் வேலை செய்யும் குடும்பத் தலைவர் ஹோமர், அவரது ஆசை மனைவி மார்ஜ், பிள்ளைகள் பார்ட், லிஸா, மகீ ஆகியோரைக் கொண்ட “சிம்ப்ஸன்ஸ்” தொலைக்காட்சித் தொடரைத் தெரியாதவர்கள் இருப்பது அரிது. இதுவரை 30 புதிய தொடர்கள் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன. பதின்மூன்று பகுதிகளுடன் முதலாவது தொடர் ஆரம்பித்தபின் ஒவ்வொரு தொடரிலும் சுமார் 20க்கும் அதிகமான பகுதிகள் வெளிவந்தன. நாளின் தொலைக்காட்சி நேர முக்கிய சமயத்தில் [prime time] ஒளிபரப்பப்படும் உலகின் பெரும்பாலான …

Read More »

கான் சினிமாவுக்கு வரும் சினிமாவைத் தடைசெய்கிறது கென்யா

“ரபீக்கி” என்ற பெயரில் கென்யாவிலிருந்து கான் சினிமா விழாவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சினிமாவை கென்யா தனது நாட்டுக்குள் தடை செய்திருக்கிறது. “நண்பி” என்ற அர்த்தமுடைய அந்தச் சினிமா பெண்களிடையேயான ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்கிறது என்பதாலேயே தடை செய்யப்பட்டிருப்பதாகக் கென்யா அறிவிக்கிறது.   கென்யாவின் பிரபல எழுத்தாளரான மொனிகா அரக் டி நியேகோவின் பரிசுகள் பெற்ற நாவலான “ஜம்புலா மரம்” தான் சினிமாப்படமாக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கை உறவுகள் ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலானவற்றில் தடை செய்யப்பட்டிருப்பதுமன்றி …

Read More »

வியட்னாம் பாடகி ஐரோப்பா வந்து போக கைதானார்

வியட்னாமின் பிரபலமான பாடகி மாய் கொய்(Mai Khoi) ஐரோப்பா வந்து நாடு திரும்பிய உடன் வியட்நாமில் கைதாகியுள்ளார்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.முக்கியமாக அவரிடம் பல சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவிக்கின்றது.குறிப்பாக Mai Khoi வியட்நாமில் மிக முக்கியமாக மக்கள் மத்தியில் மிகப்பிரபல்யம் வாய்ந்த கலைஞர் என்பதும் அரசாங்கத்தை எதிர்ந்து தன் கருத்துகளை பேசுகின்றவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.இதன் பின்னணியில் பாடகியின் ஐரோப்பிய பயண நிறைவில் இந்த கைது …

Read More »

இறுதித் துளி – சிந்திக்க வேண்டியது தான்

எதிர்காலத்தில் நீரால் ஏற்படும் சமவுடமை மாற்றத்தை வெறும் ஒரு நிமிடத்துக்குள் சொல்கிறது இந்தக் குறும்படம் இறுதித் துளி (Final Drop).தண்ணீர் தினமாகிய இன்று எம் வளமான நீரை நாம் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை நமது சமூக நடப்பியல்புகளுக்கு ஊடாக சிறப்பாக குறுந்திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மதி சுதா. வெறும் கைபேசியினால் மிகத்தெளிவாக படமாக்கப்பட்டிருக்கும் இந்த ஒரு நிமிட குறுந்திரை அகில இலங்கை அளவில் விருதுப்பட்டியலிலும் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது. சறுக்கி …

Read More »

பத்மவிபூஷண் விருதை பெற்றார் இசைஞானி

இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்றகனவே பத்மவிபூஷண் விருதுப்பட்டியலில் மூவரில் ஒருவராக தெரிவாகி இன்று அந்த விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து  பெற்றிருந்தார். கலை இலக்கியம் விளையாட்டு, சமூகம் சேவை , மருத்துவம் போன்ற முக்கியமான பல  துறைகளிலும் சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் அவர்களை கெளரவப்படுத்தி பத்ம விருதுகள் வழங்குவது வழமை. அந்த அடிப்படையில் இசைத்துறையும் நெடுங்காலமாக முழுமூச்சுடன் ஈடுபட்டு பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் இசைஞானிக்கு …

Read More »

பாகுபலி கட்டப்பா சத்யராஜ்க்கு லண்டனில் மெழுகுசிலை

லண்டனில் பிரபலமான madame tussauds என்ற உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகத்தில் பாகுபலை படத்தின் கட்ட்ப்பா என்ற பாத்திரத்தில் நடித்த நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்படவுள்ளதாக செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.இந்திய சினிமாவில் பாகுபலி என்ற திரைப்படம் மிகப்பெரும் கவனத்தை ரசிகர்கள் மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.அதில் மிகமுக்கியமாக சத்யராஜ் அவர்கள் நடித்த கட்டப்பா என்ற பாத்திரம் மிக பெரிளவில் பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக லண்டன் அருங்காட்சியகத்தில் அவருக்காக சிலை அமைக்க …

Read More »

கண்டம் விட்டு கண்டம் சைக்கிளோடி காதலித்த கதை திரைப்படமாகிறது

இது ஒரு 1978ம் ஆண்டில் நடந்த உண்மைக்கதை. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த Dr.Pradyumna kumar சுவீடனை சேர்ந்த தன் காதலியை சந்திப்பதற்காக ஆசியக்கண்டத்திலிருந்து ஐரோபிய கண்டம் நோக்கி சைக்கிளில் ஓடி சுவீடன் நாட்டை அடைந்து தன் காதலியை அடைந்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் ஈரான் துருக்கி ஊடாக அவரது பயணம் தன் காதலியின் பெற்றோரை சந்திக்கும் வரையிலும் தொடந்திருக்கிறது. நிறைவில் அவர் தன் காதலியை திருமணம் செய்து 2 பிள்ளைகளுடன் சந்தோஷமான …

Read More »