Monday , October 14 2019
Home / செய்திகள் / அரசியல் (page 7)

அரசியல்

எத்தியோப்பியா இனியாவது ஒற்றுமையாகுமா?

“ஆபிரிக்காவின் பிரச்சினையான கொம்பு” என்று குறிப்பிடப்படும் நாடுகளில் ஒன்று எத்தியோப்பியா உலகின் மிகப் புராதனமான நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்காவில் நிலப் பகுதியால் 10 வது பெரிய நாடாக இருக்கும் எத்தியோப்பியா மக்கள் தொகையை வைத்துப் பார்த்தால் ஆபிரிக்காவின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கிறது. சமீப காலமாக எத்தியோப்பியா உலகின் செய்திகளில் மீண்டும் இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. 2017 இன் கடைசிப் பகுதியில் எத்தியோப்பியாவில் பல மாதங்களாக இருந்த அவசரகாலச் சட்டங்கள் நீக்கப்பட்டன. …

Read More »

எகிப்தின் ஜனாதிபதி தேர்தல் ஒரு கண் துடைப்பா?

இந்த சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் காலத்தில் ஜனாதிபதி என்ற அதிகாரத்தில்  இருந்துகொண்டு அடுத்துவரும் தேர்தலை அழகாக இயக்கி அதில் தனது ஆதரவாளர் ஒருவரைத் தெரிந்தெடுத்துத் தனக்கு எதிராகப் போட்டியிடவைத்து 100 விகித வாக்குகளும் பெற்று வெற்றிபெறுவதென்றால் சின்ன விசயமா? கற்பனை செய்து பாருங்கள் எகிப்திய ஜனாதிபதி அப்தல் பத்தா அல்-ஸிஸியின் அரசியல் வாழ்க்கை எப்படிக் கஷ்டமானதாக இருக்கும் என்பதை! ஒர் கொடுங்கோல்ச் சர்க்கரவர்த்தி போன்று எகிப்தை 30 வருடங்கள் கட்டியாண்ட …

Read More »

பெண்களுக்குச் சம உரிமை எங்கள் பாரம்பரியத்தின் அழிவு.” போராடத் தயாராகும் கிரவேசிய மக்கள் குழுவினர்

“நாட்டில் ஆயுதப் பாவனைக் கட்டுப்பாடுகள் வேண்டும்,” என்று லட்சக்கணக்கான அமெரிக்க மாணவர்கள் தலைநகரை ஸ்தம்பிக்கவைக்கும் குரலை எழுப்பும் அதேசமயம் கிரவேசிய மக்கள் தம் மக்கள் விடயத்துக்காக ஆயிரக்கணக்கில் அணியில் போகிறார்கள். முதல்முதலாக உலகில் பெண்களுக்கெதிரான சகலவிதமான வன்முறைகளையும் ஒழித்துக்கட்டவேண்டும், தம்பதிகளுக்குள் நடக்கும் வன்முறைகளைத் தண்டிக்கவேண்டும், இரண்டு பாலினருக்கும் நாட்டில் சமத்துவம் கொடுக்கப்படவேண்டும் போன்ற உறுதிமொழிகளுடன் 2011 ம் ஆண்டு ஆறாம் மாதம் 11ம் திகதி பல ஐரோப்பிய நாடுகள் ஒரு …

Read More »

உலக மைதானத்தில் இளவரசர்களின் அரசியல் விளையாட்டு

2017 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் திகதி எவரும் கனவு கண்டிருக்காத சிலரை “தங்கக் கூண்டு” என்று குறிப்பிடக்கூடிய ரியாத்திலிருக்கும் ரிட்ஸ் கார்ல்ட்டன் என்ற உல்லாசச் சிறைக்குள் ‘தங்கவைத்தா’ எம்.பி.எஸ் குறிப்பிடப்படும் சவூதியின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான். சர்வதேச அரசியல், பொருளாதார வட்டங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது அந்த நகர்வு. சுமார் ஒரு டசின் சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட நாட்டின் உயர்மட்ட …

Read More »

பாலஸ்தீன பிரதமரை கொல்ல முயற்சி எடுத்தது யார்? வளைகுடா அரசியலில் எது வெட்ட வெளிச்சம்?

பாலஸ்தீன பிரதமர் ராமி ஹம்துல்லாஹுவும் பலஸ்தீன இரகசியப் பொலீஸ் அதிபர் மஜீத் பராஜும் சுமார் பத்து நாட்களுக்கு முன்பு [13.03] காஸா பிராந்தியத்துக்கு விஜயம் செய்த சமயம் அவர்களுடைய வாகனங்கள் கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளானது. ஏழு பேர் காயமடைந்தார்கள் குறிவைக்கப்பட்ட இருவரும் தப்பிவிட்டார்கள். காஸா பிராந்தியத்தின் பாதுகாப்பு, பாலஸ்தீன அதிகாரத்தில் இருக்கும் பத்தா அமைப்பின் [பாலஸ்தீன விடுதலை இயக்கம்] எதிரிகளான ஹமாஸின் கைகளில்தான் இப்போதும் இருக்கிறது. ஆனால், உத்தியோகபூர்வமாக இவ்விரு …

Read More »

”கேம்பிரிட்ஜ் அனலேடிக்கா” – பிரிட்டனும் தலையை உருட்டுகிறது

“உன் எதிர்தரப்பில் இருப்பவரை விபச்சாரியிடம் மாட்டிவிட நாங்கள் உதவிசெய்வோம்!”  சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உருள ஆரம்பித்த “ கேம்பிரிட்ஜ் அனலேடிக்கா ” நிறுவனத்தின் தலையை பிரிட்டனிலும் பந்தாடப்படுகிறது. டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்ட “கேம்பிரிட்ஜ் அனலேடிக்கா” பிரிட்டனில் “பிரிக்ஸிட்” தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும்படி வாக்களிக்க வேண்டிய பகுதியினருக்கும் சேவை செய்தது பற்றி வெற்றிநடை இணையம்  ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. நேற்றிரவு [19.03] பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனமான …

Read More »

சர்ஹோசி கடாபியிடமிருந்து பலகோடி யூரோ பெற்றாரா ? தொடரும் காவல்துறை விசாரணை

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோசியை இன்று பிரான்ஸ் காவல்துறை தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்பத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் லிபிய ஜனாதிபதி கடாபியிடமிருந்து சட்டத்த்திற்கு புறம்பாக பலகோடி யுரோகளை பெற்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை விசாரணைகளை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு முன்னதாக 2007 ம் ஆண்டிலும் இதேசந்தேகம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அன்றைய நாள்களில் சர்ஹோசியின் நடவடிக்கை பணிக்குழுத்தலைவர் அதனை மறுத்திருந்தார். இப்போது மீண்டும் 2012 தேர்தல்களில் …

Read More »

தேர்தல் காலம் பேஸ்புக்கில் டிரம்ப் – அணி செய்த தகிடுதத்தம்

மசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கும் “கேம்பிரிட்ஜ் அனலைடிகா” என்ற ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, என்றாலும் அப்பெயரை வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் ஒரு உதவியூட்டியை [thisisyourdigitallife] இணைத்துக்கொண்டு அந்த நிறுவனம் 2014 முதல் 50 மில்லியன்- சுமார் 25 விகிதமான அமெரிக்க வாக்காளர்களின் – அமெரிக்கர்களின் விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்துக்கள் போன்றவற்றைச் சேர்த்தது அந்த நிறுவனம். 270 000 [பேஸ்புக் அங்கத்தவர்களுக்கு]அமெரிக்கர்களுக்குத் தமது “சுயபலம்” பற்றிய பரீட்சைகளில் ஈடுபட …

Read More »

சிரியா அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

சிரியாவின் சிக்கல்களில் அவிழ்க்கப்படாத இன்னொரு முடிச்சு. சிரியாவின் உள்நாட்டுப் போர்கள் தொடங்கிய காலத்தின் முதல் பகுதியில் நாட்டின் தலைவர் பஷார் அல் ஆஸாத்தைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டால் நாட்டில் அமைதி வந்துவிடும் என்று பேசப்பட்டது. சிரிய அரசின் நீண்டகால நண்பன் ரஷ்யா தனது படையை அல் ஆஸாத்துக்கு ஆதரவாக சிரியாவுக்குள் அனுப்பியதுடன் நிலைமை மாறியது. சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றித் தங்கள் இஸ்லாமிய காலிபாத்தை நிறுவியிருந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர்தான் சிரியாவின் …

Read More »

நடக்காதது நடந்தால் என்னென்ன நடக்கும்? America Vs North Korea

பதவியிலிருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதி எவராவது, என்றாவது ஒரு வட கொரிய ஜனாதிபதியைச் சந்தித்ததுண்டா? என்ற கேள்விக்கான பதில் இதுவரை இல்லை என்பதாகவே இருக்கிறது. ஆனால், பலரையும் வாய்பிளக்கவைக்கும் காரியங்களைச் செய்துகாட்டி வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் அதைச் செய்யவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்ததிலிருந்து ‘அது நடக்குமா நடக்காதா,’ என்ற வாக்குவாதம் அரசியல் ஆராய்வாளர்களிடையே நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க வட கொரிய ஜனாதிபதி …

Read More »