Monday , October 14 2019
Home / செய்திகள் / அரசியல் (page 6)

அரசியல்

விக்கினேஸ்வரன் களத்தில் நிற்பது உறுதியா?

நடப்பு  மாகாண சபை பதவிக்காலம் முடிவடைய இன்னும் சிலமாதங்களே  உள்ள நிலையில் முதலமைச்சர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கப்போவது யார் யார் என்பதற்கான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கிவிட்டது. ஒருபுறம் தமிழரசுக்கட்சியின்  சம்பந்தன் சரியான நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று சொன்னாரே தவிர நடப்பு தமிழரசு கட்சியின் தெரிவான சி வி விக்னேஸ்வரன் அவர்கள் பெயரை உச்சரிக்கவேயில்லை.பொருத்தமானவர் வருவார் என்று பொதுவாக சொல்லிவிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் விக்கினேஸ்வரனை …

Read More »

காஸா பகுதியில் – வேதாளம் மீண்டும் மரமேறுகிறது?

மார்ச் 30 அன்று காஸா – இஸ்ரேல்  எல்லைகளில் நடாத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட பலஸ்தீனர்கள் 14 பேர்கள் கொல்லப்பட்டு 700க்கும் மேலானவர்கள் காயமடைந்தார்கள் என்பதும் மேலும் ஐந்து பேராவது காஸாவின் மற்றைய பகுதிகளில் கொல்லப்பட்ட்டார்கள் என்பது சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறவில்லை. “அவமானத்தைவிடச் செத்து அழிவதே மேல்” என்ற கூக்குரலுடன் தொடர்ந்தும் பாலஸ்தீனர்கள் காஸாவில் நடத்திவரும் கண்டனப் பேரணிகள் 06.04 வெள்ளியன்று மீண்டும் காத்திரமாகி மேலும் அதிக …

Read More »

அமெரிக்காவுக்கு போட்டியா? – ஐரோப்பிய இராணுவப் படை

ஐக்கிய அமெரிக்காவுக்கு ஈடாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க டொலர்களுக்கு எதிராக யூரோ  என்ற நாணயம் போன்றவைகளை உருவாக்கிய ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ அமைப்புக்கு ஈடாக ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவ அமைப்பை உண்டாக்குவதற்கும் நீண்ட காலமாகத் திட்டமிட்டுக்கொண்டிருந்தன. சர்வதேச அரசியல், பொருளாதார விடயங்களில் நீண்டகாலமாக ஐரோப்பாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயற்பட்டாலும் இரண்டா உலகப் போரில் அடிபட்டு வீழ்ந்த ஐரோப்பாவை மீண்டும் உயிர்ப்பிப்பதில் உதவிய அமெரிக்காவின் “மூத்தண்ணன்” மனப்பான்மை மீது …

Read More »

வட- தென் கொரியாக்களிடையே கலாசாரப் பாலம்

தென்கொரியாவில் நடந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய நல்விளைவுகளில் ஒன்றாக வட- தென் கொரிய நாடுகளுக்கிடையே உண்டாகியிருக்கும் நல்லெண்ணங்களைக் குறிப்பிடலாம். வட கொரிய அதிபரின் சீன விஜயம், டிரம்ப்புடன் சந்திக்கப் போவதாக அறிவிப்பு, அணு ஆயுத ஆராய்ச்சிகளை நிறுத்துவதாக வட கொரியா அறிவிப்பு ஆகியவைகளுடன் தென் கொரியக் கலாச்சாரக் குழுவொன்று வடகொரியாவுக்குள் நிகழ்ச்சிகளை நடாத்துவது போன்ற இதுவரை எவராலுமே கற்பனை செய்துபார்க்க முடியாத விடயங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன, அல்லது நடந்திருக்கின்றன. இசை, …

Read More »

ரணில் வென்றார்

சிறிலங்காவின் பிரதமர் ரணிலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மகிந்த சார்பு கூட்டு எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டு ரணில் வென்றார். வாக்கெடுப்பில் 122 வாக்குகள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும் 76 வாக்குகள் ஆதரவாகவும் விழுந்தன.27 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தவிர்க்க வெற்றி ரணில் பக்கம் உறுதியாகியது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராகவே தங்கள் வாக்குகளை பதிவுசெய்தனர். இங்கு ஜேவிபி பிரேரணையை ஆதரித்திருந்தது என்பது …

Read More »

“கதை வெளியில் போகக் கூடாது” கூட்டமைப்பு கூடிப் பேசியது என்ன?

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் போது கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கான கூட்டம் நீண்ட கூட்டமாக நடந்தேறியபோது பேசிய விடயங்கள் “வெளியில் கதை போகக்கூடாது” என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு உரையாடப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஊடகங்களுக்கு சொல்லக்கூடாது என்று அழுத்தம் கொடுக்கப்பட்ட விடயங்கள் எங்கள் ஊடகங்களுக்கு கிட்டியிருக்கிறது. அவற்றில் சில *ரணிலை கைவிட்டு விடாதீர்கள், அவருடன் சேர்ந்து நிற்கலாம் , தமிழர் …

Read More »

அகதிகளைத் துரத்தியடிக்கும் உலக அகதிகளின் நாடு

இஸ்ரேலைப் பொறுத்தவரை, பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளையே பெரும்பாலும் உலக ஊடகங்கள் கவனிப்பது வழக்கம். அதனால், ஆபிரிக்கர்களுக்கு எதிராக இஸ்ராயேலிய அரசும், சில நிறவாத இயக்கங்களும் எடுத்துவரும் நடவடிக்கைகள் அதிகம் பேரின் கவனத்தை ஈர்ப்பதில்லை எனலாம். இஸ்ரேல் நாடிழந்தவர்களால், புலம் பெயர்ந்தவர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். யூதர்கள் தமது நிலத்தை இழந்ததால் அவர்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நாடு என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். ஐரோப்பாவிலிருந்து துரத்தப்பட்ட அஸ்கனாஸி யூதர்கள், வட …

Read More »

பொக்கோ ஹறாம் இயக்கமும் நைஜீரிய அரசும்.

ஒரு சில மாதங்களாகவே பல அரசியல் வட்டாரங்கள் சந்தேகப்பட்டதைக் கடந்த வாரம் நைஜீரிய  தகவல் தொடர்பு அமைச்சர் லாய் முஹம்மது உத்தியோகபூர்வமாக அறிவித்தார். “பொக்கோ ஹராம் இயக்கத்தினருடன் நாம் சில காலமாகவே தொடர்பு கொண்டு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தந்தை நிலை நாட்ட பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருக்கிறோம்,” நைஜீரியாவின் வட பகுதியில் வேரூன்றியிருக்கும் பொக்கோ ஹறாம் தீவிரவாதிகள் பல தடவைகளிலும் இளம் பெண்களைக் குறிப்பாக பாடசாலை மாணவிகளைக் கடத்திச் சென்று தங்களது …

Read More »

எகிப்து தேர்தலில் மீண்டும் ஸிலி வெற்றி!

மத்திய கிழக்கின் ஸ்திர நிலைமைக்கு முக்கியமான நாடு எகிப்து. அங்கே கால் நூற்றாண்டுக்கு மேலாக அசையாத ஆட்சியமைத்திருந்த ஹூஸ்னி முபாரக்கின் வீழ்ச்சியின் பின்பு ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்குப் பின்பு ஓரிரு வருடங்கள் உண்டாகியிருந்த அரசியல் நிலையின்மையை 2014 ம் வருடம் ஆட்சியைக் கைப்பற்றியதன் மூலம் தீர்த்துவைத்தவர் அல் பத்தா அல்-ஸிஸி. இராணுவத்தின் மூலம் ஆட்சிகைக் கைப்பற்றித் தேர்தல்களை நடாத்தி 2014 இல் 47.5 விகித வாக்காளர்களைச் சாவடிகளுக்கு “வரவைத்த” அவர் அன்று …

Read More »

கானாவில் அமெரிக்கா போடும் திட்டம் என்ன?

அண்மையில் அமெரிக்கா தரும் பண உதவிக்காக  கானா பாராளுமன்றம் ஆமோதித்த  தீர்மானம் அமெரிக்கா போடும் திட்டத்தின் முதற்படி என்று நோக்கப்படுகிறது. அல் கைதா, ஐ.எஸ் ஆகிய மிலேச்ச இயக்கங்கள் நேரடியாகவும் ஆபிரிக்கப் பிராந்திய தீவிரவாதிகளுக்குப் பக்கபலமாகவும் புர்க்கினோ பாஸோ, மாலி, மொரிதானியா, நைகர், சாட், கமரூன், ஆகிய நாடுகளில் மையங்களை வைத்துக்கொண்டு அல்ஜீரியா, நைஜீரியா, லிபியா, கமரூன் போன்ற நாடுகளில் தமது சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க முயன்று, ஓரளவு வெற்றி கண்டு …

Read More »