Monday , July 13 2020
Home / செய்திகள் / அரசியல் (page 5)

அரசியல்

காஸா போராட்டம், வாரம் ஐந்து.

ஐந்தாவது வாரமாக காஸா – இஸ்ராயேல் எல்லையில் “எங்கள் சொந்த நிலத்துக்குத் திரும்ப எங்களை அனுமதி,” என்ற கோஷத்துடன் பலஸ்தீனர்கள் போராடுகிறார்கள். அவர்கள் அவ்வெல்லையிலேயே கூடாரங்களை அமைத்து அங்கேயே உணவைச் சமைத்து, சாப்பிட்டு, உறங்கி எழுந்து கொண்டிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் அவர்களுடைய போராட்டம் உச்ச நிலை அடைகிறது. அந்த நாட்களில் எல்லையில் டயர்களை எரித்துக் கறுப்புப் புகையால் இஸ்ராயேல் எல்லைக் காவலர்களின் கண்களில் தெரியாதபடி நின்றுகொண்டு அவர்களுக்குக் கல்லெறிகிறார்கள் இளவயதினர். பலஸ்தீனப் …

Read More »

ருமேனியத் தூதுவராலயம் ஜெருசலேமுக்கு மாறுமா?

தெல்அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு   இஸ்ராயேலிலிருக்கும் ருமேனியத் தூதுவராலயத்தை மாற்றுவது பற்றி நாட்டின் பிரதமர் வியோரிகா டன்ஸிலா அறிவித்தால் ஒரு அரசியல் சிக்கல் உண்டாகி மோசமாகிக்கொண்டு வருகிறது. “வியோரிகா டன்ஸிலாவால் ருமேனியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல்கள் உண்டாகியிருக்கின்றன. அவை ருமேனியாவுக்குப் பாதகமாகின்றன. எனவே அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும்,” என்று பகிரங்கமாக நாட்டின் ஜனாதிபதி கிளௌஸ் யோஹான்னிஸ் அறிவித்திருக்கிறார். பிரதமரை அவர் தனது காரியாலயத்தில் வந்து சந்திக்கச் சொன்னதைப் பிரதமர் ஏற்கவில்லை. …

Read More »

கத்தார் சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்பப்போவதில்லை!

கடந்த வாரம் சவூதியின் வெளிநாட்டு அமைச்சர் தங்களது இராணுவத்தை சிரியாவுக்கு ஆயுத கடத்தலை அனுப்பவிரும்புவதாகச் சொல்லி அதையே கத்தாரும் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார். அமெரிக்கா சிரியாவிலிருக்கும் தனது இராணுவத்தைத் திருப்பியெடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தபோது, அமெரிக்காவின் இராணுவம் கைப்பற்றியிருக்கும் சிரியாவின் பிராந்தியங்களில் தங்களது இராணுவத்தை நிறுத்தி அவ்விடங்களில் ஈரானின் இராணுவம் வராமல் தடுக்கவே சவூதி அவ்விருப்பத்தைத் தெரிவித்திருந்தது. “சவூதியின் வெளிவிவகார அமைச்சுக்கு மறுமொழி சொல்வதே அநாவசியம். அதுபோன்று அரபிய மக்களின் மூளைகளைச் சலவைசெய்யும் …

Read More »

இத்தாலியில் எப்போ அரசு அமையும்?

இத்தாலியில் பொதுத்தேர்தல்கள் முடிந்து சுமார் இரண்டு மாதங்களாகின்றன. தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை என்பதால் இத்தாலியின் அரசியல் ஸ்தம்பித்த நிலையிலேயே இன்னும் இருக்கிறது. பாரம்பரிய அரசியலை எதிர்க்கும் M5S கட்சி 32 விகித வாக்குகளைப் பெற, வலதுசாரிகள், நடு நிலை சார்புக் கட்சிகள், இனவாதிகளைக் கொண்ட கூட்டணி 37.4 விகிதத்தைப் பெற, இரண்டு தரப்பினருமே “நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்,” என்று முடிவுகள் வெளியான நாளில் …

Read More »

ஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது!!

பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் எதிரிகளாகக் கருதும் தன்மை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதாக 25.04 அன்று உலகின் ஊடகச் சுதந்திரம் பற்றிய “எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர்கள்” [ Reporters Without Borders ] அமைப்பின் வருடாந்தர அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளான மால்டா, செக் ரிப்பப்ளிக், ஸ்லோவாக்கியா, செர்பியா ஆகிய நாடுகளில் அதிகாரத்திலிருக்கும் அரசுகள் திட்டமிட்டே ஊடகவியலாளர்களைக் கேவலப்படுத்துவது கவனிக்கப்பட்டிருக்கிறது. அவைகளைத் தவிர போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளிலும் …

Read More »

இஸ்ரேலும் ஆபிரிக்க அகதிகளும்

“ஆபிரிக்காவிலிருந்து வந்த அகதிகள் திரும்பித் தங்கள் நாடுகளுக்குப் போகவேண்டும்,” “திரும்பிப் போகிறவர்களுக்கு இஸ்ரேலிய அரசு தலைக்கு 3,500 டொலர்கள் கொடுக்கும்,” “ திரும்பிப் போக மறுப்பவர்கள் கட்டாயமாகத் தமது நாடுகளுக்கோ அல்லது மூன்றாவது நாடொன்றுக்கோ திருப்பியனுப்பப்படுவார்கள்,” என்ற இஸ்ராயேல் அரசின் கருத்து திடீரென்று “ஆபிரிக்க அகதிகளைக் கட்டாயமாகத் திரும்பிப்போகச் செய்யும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாது,” என்று 24.04 அன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அகதிகளில் பெரும்பான்மையானோர் எரித்திரியா, சூடான் ஆகிய …

Read More »

ஈரான் – அமெரிக்க ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

ஈரான் பக்கத்திலிருந்து சில நாட்களாகவே “எங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எங்கள் இஷ்ட்ப்படி நாம் தயாரித்துக்கொள்வோம் அல்லது கொள்வனவு செய்வோம் அதை யாராலும் தடுக்கமுடியாது. அவற்றுக்காக நாம் எவரது அனுமதியை நாடவும் போவதில்லை,” என்ற சவால் வந்துகொண்டிருக்கிறது. அதன் காரணம் அமெரிக்காவின் அதிபர், ஈரானுடன் பதவியிறங்கிய ஜனாதிபதி ஒபாமா செய்துகொண்ட அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தைத் தான் ரத்து செய்துவிடுவேன் என்று பதவியேறிய காலத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருப்பதாகும். அந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை ஐரோப்பிய …

Read More »

காஸ்ட்ரோ குடும்பம் தலைமை தாங்காத கியூபா?

1959 இல் கியூபாவின் சர்வாதிகாரியை கெரில்லாப் போரின் மூலம் ஒழித்துக்கட்டிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் உருவகமாக சர்வதேசத்துக்கு மாறினார் என்றார் அது மிகையாகாது. கம்யூனிசவாதியான காஸ்ட்ரோ பல சமூகப் பிரச்சினைகளாலும் சிதறிப்போயிருந்த நட்டை ஒன்றுபடுத்தி மெதுவாக ஒரு நவீன குடியரசாக்கினார். சர்வதேச அளவில் சமூகத்தின் சகல தரப்பினருக்கும் கல்வி, ஆரோக்கியம் போன்றவைக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடாக மிளிர்ந்தது கியூபா. அதேசமயம் கியூபா ஒரு மூடப்பட்ட நாடாகவும் ஆகியது. காஸ்ட்ரோவும் அவரது …

Read More »

சர்வதேச அரசியலில் கடந்த வாரம்

சர்வதேச அரசியல் வானத்தில் இவ்வாரம் முக்கிய இடத்தைப் பெற்ற விடயம் “டிரம்ப் உறுதியளித்த சிரியா மீதான தாக்குதல் இப்போ வருமா, உடனடியாக வருமா?” என்பதில் ஆரம்பித்தது. அவ்விடயத்தைத் தொடுவ தற்கு முன்பு சுவீடனில் ஊடகங்கள், அரசியல், சமூகம் என்று சகலத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த ஸ்வென்ஸ்கா அக்கடமி. நோபல் பரிசுகளைப் பற்றித் தெரிந்திருக்கும் பலருக்கும், அவைகள் யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதை வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வெவ்வேறு அமைப்பினர்கள் தெரிந்தெடுக்கிறார்கள் என்பது …

Read More »

தமிழ்நாட்டில் மறுக்கப்படும் உரிமைகளுக்காக லண்டனிலும் அறப்போர்

லண்டனில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் அறப்போர் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  காவேரி மேலாண்மைக்காக, நீட் தேர்விற்கு எதிராக, ஸ்டெரலைட்டுக்கு எதிராக, கெயில் எரிவாயுத் திட்டத்திற்கு எதிராக, மீதேனுக்கு எதிராக, சாகர் மாலவிற்கு எதிராக, கூடாங்குள அணு மின்னிலையத்திற்கு எதிராக, சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தமிழ் வேண்டி இலண்டனில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் …

Read More »