Wednesday , June 3 2020
Home / செய்திகள் / அரசியல் (page 4)

அரசியல்

ஒரு வருடத்தின் பின்பு மக்ரோனின் பிரான்ஸ்

பதவியேற்று ஒரு வருடங்களாகப் பல மாற்றங்களைப் பிரான்ஸில் செய்துவருகிறார் இம்மானுவல் மக்ரோன். பிரான்ஸின் மிக இளைய ஜனாதிபதியான அவர் எவரும் எதிர்பாராத வேட்பாளராக, புதுக் கட்சியை ஆரம்பித்து வெற்றியெடுத்தார், பல வருடங்களாகவே பிரான்ஸ் அரசியலில் முன்னேறிவந்த வலதுசாரி நிறுவாத அரசியல்வாதியான மரீன் லி பென்னை வீழ்த்தி. சர்வதேசத் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையைப் பிரான்ஸில் நிறைவேற்றவிருப்பதாகச் சொன்னதுபோலவே செய்துவரும் மக்ரோனை எதிர்த்து பழமைவாதிகளும், இடதுசாரிகளும் பல எதிர்ப்புப் பேரணிகளை நடாத்தி வருகின்றனர். …

Read More »

லெபனானில் பாராளுமன்றத் தேர்தல்

ஒன்பது வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக லெபனானில் தேர்தல் நடக்கிறது. சவூதி அரேபியாவின் நண்பர்கள் ஒருபக்கம் ஈரானின் நண்பர்கள் இன்னொரு பக்கம் போட்டியிடும் தேர்தலில் முதல் தடவையாக வெளிநாடுகளில் வசிக்கும் லெபனானைச் சேர்ந்தவர்களும் வாக்களிக்கிறார்கள். 1943 இல் சுதந்திர நாடாகிய காலம் முதல் லெபனான் அரசியல் அதனைச் சுற்றிவர இருக்கும் நாடுகள் தங்கள் பலத்தை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளும் மைதானமாகவே இருக்கிறது. நிஜமான வேலையில்லாத் திண்டாட்டம் 40 விகிதமாக  இருக்க 25 …

Read More »

“எனது மரணச் சடங்குகளில் டிரம்ப் பங்குபற்றக்கூடாது!”

அரிசோனாவின் செனட்டரான ரிப்பப்ளிகன் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் அதிகமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். மரணத்தை மிக விரைவில் எதிர்நோக்கும் மக்கெய்னுக்கும் ஜனாதிபதி டிரம்புக்கும் மனக்கசப்புக்கள் இருக்கின்றன. அதனால், தனது மரணச் சடங்குகளில் டொனால்ட் டிரம்ப்புக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் சார்பில் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் கலந்துகொள்ளவேண்டும் என்று ஜோன் மக்கெய்ன் விரும்புவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தனது …

Read More »

2305 பேர் சவூதியில் விசாரணைகளின்றிச் சிறையில்.

ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைச் சவூதி அரேபியா விசாரணைகளின்றி பத்து வருடங்களுக்கும் அதிகமாகச் சிறையில் வைத்திருப்பதாக “ஹுயூமன் ரைட்ஸ் வோட்ச்” குற்றஞ்சாட்டிச் சவூதியின் அரசகுமாரனைக் கண்டிக்கிறது. சவூதிய அரசின் அதிகாரபூர்வமான விபரங்களின்படி 2,305 பேர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் ஒரு பகுதியினர் பத்து வருடத்திற்கும் அதிகமாக நீதிமன்றங்களெதிலும் முன்நிறுத்தப்படாமல் சிறையில் இருக்கிறார்கள். எம்.பி.எஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் சவூதியின் இளவரன் நாட்டின் அதிகாரங்களில் ஈடுபட்டு நாட்டின் சட்டங்கள் சிலவற்றை மாற்றி மக்களுக்கு முன்னைவிட …

Read More »

“பலஸ்தீனர்களை அங்கவீனமான சமூகமாக்காதீர்!”

“சொந்த மண்ணுக்குத் திரும்பும்”  Great March of Return] கோஷத்துடன் அகிம்சை எண்ணத்துடன் ஒரு மாதத்துக்கு முன்பு போராட்டம் ஆரம்பித்த காஸா வாழ் பலஸ்தீனர்களை , அது தொடங்கிய வெள்ளியன்றே வழக்கம்போல இஸ்ராயேல் எல்லைக்காவலர்கள் மீது கல்லெறிந்து அவர்களை ஆக்ரோஷப்படுத்துவதாக மாறிவிட்டது. கடந்துபோன ஒவ்வொரு வெள்ளியன்றும் மேலும் மோசமாகிய அப்போராட்டம் இதுவரை 48 உயிர்களைக் குடித்திருக்கிறது. சில நூறுபேர் கடுமையாகக் காயமடைந்திருக்கிறார்கள். உடல் அங்கங்களை இழந்தவர்கள் பலர். காஸாவுக்கும் இஸ்ராயேலுக்கும் …

Read More »

மாஜி நைஜீரிய ஜனாதிபதியின் லஞ்ச ஊழல்கள்

நைஜீரியாவின் மாஜி ஜனாதிபதி குட்லக் ஜோனதனின் மனைவிக்குச் சொந்தமான இரண்டு சொத்துக்களை பறிமுதல் செய்ய நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜோனதனின் மனைவியான பேஷன்ஸ் ஜோனதன் மீது அவரது கணவர் பதவியிலிருக்கும்போது செய்ததாகக் குறிப்பிடப்படும் பல வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. பிரிட்டனின் சர்வதேச முன்னேற்றத் திணைக்களத்தின் கணிப்பீட்டின்படி ஜோனதனின் ஆட்சிக்காலத்தில் சுமார் 32 பில்லியன் டொலர்களை நைஜீரிய ஆட்சியாளர்கள் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.    தற்போதைய ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து லஞ்ச ஊழல்களாலான பணம், சொத்து ஆகியவை …

Read More »

மலேசியாவில் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளுக்குத் தடை

மலேசியாவில் சில வாரங்களுக்கு முன்பு “செய்திகளைத் திரிபுபடுத்திப்” பரப்புகிறவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டம் தனது முதலாவது பலியை எடுத்தது. மலேசியாவுக்கு சுற்றுலா வந்திருந்த யேமனைச் சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் சாலெ சலெம் சாலெ சுலைமான் என்ற 46 வயதானவருக்குப் பத்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் யுடியூப் படத் துணுக்கொன்றில் சமீபத்தில் மலேசியாவில், கோலாலம்பூரில் கொலை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டவுடன் வேண்டுமென்றே நாட்டின் அவசர …

Read More »

லண்டன் தேர்தல்கள் – தெரேசாவின் கட்சிக்கு வெற்றி தருமா?

03.05 வியாழனன்று லண்டனும் வேறு சில உள்ளூராட்சி சபை அதிகாரங்களுக்கான தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. வரிவிதித்தல், போக்குவரத்து மற்றும் குடியேற்றம் பற்றியவைகள் அத்தேர்தலின் வெற்றி, தோல்வியை முடிவுசெய்யும். பிரதமர் தெரெஸா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் பிரிட்டனில் ஏற்படுத்தியிருக்கும் எதிர்ப்பு அலை அவரது ஆதரவை இத்தேர்தல்களில் தண்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்சர்வேட்டிக் கட்சியின் கடந்த எட்டு ஆண்டு ஆட்சி பொதுத்துறைக்கான நிதியைக் குறைத்ததனால் ஏற்பட்டிருக்கும் மக்களின் வெறுப்பும் இத்தேர்தலில் …

Read More »

டிரம்பைச் சந்திக்கவிருக்கும் முதலாவது ஆபிரிக்கத் தலைவர்

முதன் முதலாக டிரம்ப்பைச் சந்திக்கும் ஆபிரிக்கத் தலைவராகவிருக்கிறார் நைஜீரியாவின் ஜனாதிபது முஹம்மது புஹாரி. ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஆபிரிக்க நாடுகளை மிகவும் மோசமாகக் குறிப்பிட்டபின் திங்களன்று நடக்கவிருக்கும் அச்சந்திப்பை உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றன.   அத்துடன் நைஜீரியாவுக்கு விஜயம் செய்த சமயத்தில்தான் வெளிநாட்டமைச்சர் ரெக்ஸ் தில்லர்ஸன் பதவி டிரம்பினால் பறிக்கப்பட்டது என்பதாலும் ஆபிரிக்காவுடன் டிரம்ப் எப்படியான உறவை உண்டாக்கவிரும்புகிறார் என்பது இதுவரை வெளியாகவில்லை. பொக்கோ ஹராம் …

Read More »

ஈரானுடன் அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் ஐரோப்பிய தலைவர்கள்.

அமெரிக்க அதிபர் “படு மோசமான ஒப்பந்தம்,” என்று ஈரானுடன் ஒபாமா காலத்தில் அமெரிக்கா செய்துகொண்ட அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு அதைத் தான் குப்பையில் போட்டுவிடுவேன் என்று அடிக்கடி எச்சரித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், பிரான்ஸ், ஜேர்மனி மட்டும் பிரிட்டன் நாடுகளின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஈரானுடனனான அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் பேணுவதைத் தாங்கள் ஆதரிப்பதாக அறிக்கை விட்டிருக்கிறார்கள். “அவ்வொப்பந்தத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி அமெரிக்காவுடன் நெருங்கிய பேச்சுவார்த்தைகள் நடாத்தித் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று …

Read More »