Wednesday , June 3 2020
Home / செய்திகள் / அரசியல் (page 3)

அரசியல்

ஈராக்கிய தேர்தல் முடிவுகள்

அமெரிக்க ஆதரவாளரும், ஈரானின் அரசியல் ஈராக்குக்குள் நுழைவதை விரும்பாதவருமான ஷீயா – இஸ்லாம் மார்க்கத் தலைவரான மொக்தடா அல்-சாதிர் அணி கடந்த வாரம் ஈராக்கில் நடந்த பொதுத் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்படுகிறது. அல்-சாதிர் அணியினரின் 54 இடங்களுக்கு அடுத்ததாக ஈரான் ஆதரவு அரசியல் அணி 47 இடங்களையும், ஈராக் பிரதமரின் அரசியல் அணி 42 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. ஆன்மீகத் தலைவரான அல்-சாதிர் வேட்பாளராக எத் தொகுதியிலும் நிற்காததால் அவர் பிரதமராகப் …

Read More »

காஸா எல்லைக்குப் போகும் ஹமாஸ் தலைவர்

காஸாவின் இஸ்ராயேல் எல்லையில் சுமார் ஏழு வாரங்களாக நடத்தப்பட்டுவந்த எதிர்ப்புப் பேரணிகளைத் தனதாக்கிப் பல இளவயதினரை இஸ்ராயேலின் இராணுவத்துக்குக் காவு கொடுத்தார்கள் ஹமாஸ் இயக்கத்தினர். அதன் உச்சக்கட்டமாக ஜெருசலேமில் அமெரிக்கத் தூதுவராலயம் திறக்கப்பட்ட திங்களன்று 60 பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆயிரத்துக்கும் மேலானோர் காயமுற்றனர். சர்வதேசத்துக்குக் காட்டுவதற்காக வேண்டுமென்றே காஸாவின் இளையவர்களைக் ஹமாஸ் தூண்டிக் கொலைக்கு அனுப்பியதைத் தவிர வேறெந்த நன்மையும் அதனால் விளையவில்லை என்ற கருத்தே பெரும்பாலானோர்களிடம் நிலவிவருகிறது. …

Read More »

தமது வீடுகளுக்குத் திரும்பிய 350 குடும்பங்கள்

சிறீ லங்காவில் போர் முடிந்த பின்பு முதல் தடவையாக இராணுவம், கடற்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதியொன்றை அங்கே ஏற்கனவே வாழ்ந்த மக்கள் தம் வசப்படுத்தியிருக்கிறார்கள். இரணைதீவுப் பிரதேசத்தில் 26 வருடங்களுக்கு முன்பு தங்களிடமிருந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை சுமார் 350 குடும்பத்தினர் கைப்பற்றினர். மூன்று வாரங்களின் பின்பு 15ம் திகதியன்று அரசு அதை ஏற்றுக்கொண்டு அக்குடும்பத்தினர்களின் பிரதிநிதிகளிடம் அங்கே வாழ்வதற்கான அனுமதியை வழங்கியது.

Read More »

வட கொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வட கொரிய அதிபர் கிம் யொங் உன் தனது பதவியில் இருக்கவேண்டுமானால் நாட்டின் அணு ஆயுத ஆராய்ச்சிகளை நிறுத்திவிடவேண்டும் இல்லையெனில் லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட நிலைமையே அவருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கிறார் டொனால்ட் டிரம்ப். திட்டமிட்டபடி வரவிருக்கும் அமெரிக்க – வட கொரிய அதிபர்கள் சந்திப்பு நடந்து அதன்மூலம் ஒரு நல்ல ஒப்பந்தம் உண்டாகுமானால், வட கொரியாவை ஒரு சுபீட்ச நாடாக மாற்ற கிம் யொங் உன்னுக்கு அமெரிக்கா சகல …

Read More »

வேகமாக உயரும் எண்ணெய் விலை

ஒபெக் அமைப்புக்குள்ளும் வெளியே இருக்கும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு இன்றுத் தேவையான எண்ணெயைச் சந்தைக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு உலகச் சந்தையில் எண்ணெய் விலை விழுந்துகொண்டிருப்பதைத் தடுக்க சவூதி அரேபியா மிகவும் பிரயத்தனப்பட்டுப் ரஷ்யா உட்பட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தித் தமது எண்ணெய்த் தயாரிப்பைக் குறைத்துக்கொண்டன. இதன் விளைவாகவே சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து பெற்றோலியத்தின் …

Read More »

வெனிசூலாவும் ஜனாதிபதித் தேர்தலும்

20\05 ஞாயிறன்று வெனிசுவேலாவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என்றே பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் முக்கியமானவர்களையெல்லாம் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்துவிட்டு நாட்டின் ஜனாதிபதி நிக்கலோஸ் மதூரோ அறிவித்திருக்கும் தேர்தலின் காரணம் தனது பதவியின் அதிகாரங்களை அதிகரித்துக்கொண்டு அதன் மூலம் தன்னை நிலையான ஒரு சர்வாதிகாரியாகிக் கொள்வதே என்று பலரும் சந்தேகப்படுகிறார்கள். அதேசமயம் மதுரோவின் ஆட்சியை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற குறிக்கோளை எதிர்க் கட்சிகள் கொண்டிருந்தாலும் தங்களுக்குள் …

Read More »

வட கொரியாவின் இரும்புக் கதவுகள் திறக்கின்றனவா?

தனது நாட்டின் அணு ஆயுதப் பரீட்சை நிலையத்தை இம்மாதம் 23 – 25 திகதிகளில் மூடிவிடப்போவதாக வட கொரியாவின் வெளிநாட்டு அமைச்சரகம் தெரிவிக்கிறது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரிய நாடுகளின் பத்திரிகையாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் கொண்டாட்டம் நடாத்தி அந்த மூடு விழா நடாத்தப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.    குறிப்பிட்ட அணு ஆயுதப் பரீட்சை நிலையத்திலிருப்பவைகளைப் பீப்பாய்களில் போட்டு அகற்றிவிட்டு அந்த நிலையத்தைக் குண்டுவைத்துத் தகர்த்துவிடப்போவதாகவும் அதன் …

Read More »

இந்தோனேசியாவில் தேவாலயங்களில் குண்டுகள்

இந்தோனேசியாவில் ஜாவாவின் கிழக்கில் கடலோரமாக இருக்கும் சுரபாயா நகரில் மூன்று கிறீஸ்தவ தேவாலயங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத் தகவல்கள் சுமார் 10 பேர் இறந்ததாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கின்றன. தேவாலயங்கலின் ஞாயிறுப் பூசைக்கு வந்தவர்கள் மீதே மனித வெடிகுண்டுகளால் இத்தாக்குதல்கள் சுமார் 10 நிமிடங்களுக்குள் நடாத்தப்பட்டிருக்கின்றன. நான்காவதாக இன்னொரு தேவாலயமும் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பதட்டமான நிலையிலிருக்கும் நகரில் நிலவுகிறது. இன்றைய தினத்தில் தேவாலயங்களில் நடைபெறவிருந்த உணவு …

Read More »

என்ன நடக்கிறது உலகில்……

பெரும்பாலானவர்களால் எதிர்பார்க்கப்பட்டது போலவே டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் அணுத் தொழில் நுட்ப ஆராய்ச்சிகள் பற்றி ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜேர்மனி அமெரிக்கா ஆகிய நாடுகள் 2015 இல் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டொனால்ட் டிரம்ப் [08.05]அறிவித்தார். அந்த முடிவை டிரம்ப் எடுக்கப்போகிறார் என்பது தெரிந்திருந்தாலும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அது முகத்திலறைந்தது போலவே இருந்தது. ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானியும் அம்முடிவை …

Read More »

“பஷார் அல்-ஆஸாத்தைக் கொலை செய்வோம்!”

சிரியாவினுள் நடக்கும் போரில் இயங்கும் ஈரானின் இராணுவத்தைப் பஷார் அல் ஆஸாத் தொடர்ந்தும் இயங்க அனுமதிப்பாரானால் தாம் அல்-ஆஸாத்தைக் கொல்லத் தயார் என்று எச்சரிக்கிறார் இஸ்ரேலின் அமைச்சர் யுவெல் ஸ்டென்ய்ண்ட்ஸ். “அல்-அஸாத் தனது பாதுகாப்பான அரண்மனையில் இருந்துகொண்டு சிலர் இஸ்ராயேலைத் தாக்குவதற்குத் திட்டமிடும் மைதானமாகச் சிரியாவை மாற்றுவதை நாங்கள் அனுமதிக்க இயலாது. அதன் விளைவு நாங்கள் அவரைச் சிரியாவின் தலைவராக இருக்க அனுமதிக்க முடியாது” என்கிறார் ஸ்டென்ய்ண்ட்ஸ். இந்த எச்சரிக்கை …

Read More »