Breaking News
Home / செய்திகள் / அரசியல்

அரசியல்

தேர்தல் காலம் பேஸ்புக்கில் டிரம்ப் – அணி செய்த தகிடுதத்தம்

மசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கும் “கேம்பிரிட்ஜ் அனலைடிகா” என்ற ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, என்றாலும் அப்பெயரை வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் ஒரு உதவியூட்டியை [thisisyourdigitallife] இணைத்துக்கொண்டு அந்த நிறுவனம் 2014 முதல் 50 மில்லியன்- சுமார் 25 விகிதமான அமெரிக்க வாக்காளர்களின் – அமெரிக்கர்களின் விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்துக்கள் போன்றவற்றைச் சேர்த்தது அந்த நிறுவனம். 270 000 [பேஸ்புக் அங்கத்தவர்களுக்கு]அமெரிக்கர்களுக்குத் தமது “சுயபலம்” பற்றிய பரீட்சைகளில் ஈடுபட …

Read More »

சிரியா அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

சிரியாவின் சிக்கல்களில் அவிழ்க்கப்படாத இன்னொரு முடிச்சு. சிரியாவின் உள்நாட்டுப் போர்கள் தொடங்கிய காலத்தின் முதல் பகுதியில் நாட்டின் தலைவர் பஷார் அல் ஆஸாத்தைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டால் நாட்டில் அமைதி வந்துவிடும் என்று பேசப்பட்டது. சிரிய அரசின் நீண்டகால நண்பன் ரஷ்யா தனது படையை அல் ஆஸாத்துக்கு ஆதரவாக சிரியாவுக்குள் அனுப்பியதுடன் நிலைமை மாறியது. சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றித் தங்கள் இஸ்லாமிய காலிபாத்தை நிறுவியிருந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர்தான் சிரியாவின் …

Read More »

நடக்காதது நடந்தால் என்னென்ன நடக்கும்? America Vs North Korea

பதவியிலிருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதி எவராவது, என்றாவது ஒரு வட கொரிய ஜனாதிபதியைச் சந்தித்ததுண்டா? என்ற கேள்விக்கான பதில் இதுவரை இல்லை என்பதாகவே இருக்கிறது. ஆனால், பலரையும் வாய்பிளக்கவைக்கும் காரியங்களைச் செய்துகாட்டி வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் அதைச் செய்யவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்ததிலிருந்து ‘அது நடக்குமா நடக்காதா,’ என்ற வாக்குவாதம் அரசியல் ஆராய்வாளர்களிடையே நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க வட கொரிய ஜனாதிபதி …

Read More »

ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றம் – தெரேசா மே உத்தரவு

பிரித்தானியாவில் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய உளவாளி Sergei skripal மற்றும் அவரின் மகள்  தொடர்ந்தும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ரஷ்யாவிடம் பதிலளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். தொடர்ந்தும் ரஷ்யாவின் மௌன நிலையில் பிரித்தானியாவில் இருக்கும் 23 ரஷ்ய அதிகாரிகளையும் வெளியேற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் ரஷ்யா பிரித்தானியாவின் குற்றச்சாடுக்களை முற்றிலும் மறுத்துள்ளது. பாதிக்கப்பட்ட Sergei skripal …

Read More »

ஜெனீவாவில் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டம்

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு மாபெரும் மக்கள் அலையாக ஜெனீவா நோக்கிய பேரணியாக மிகப்பெரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.தாயகத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு இந்த போராட்டம் இன்று மாலை 2 மணிக்கு ஆரம்பமாகி ஐ நா முன்றலை நோக்கியதாக இடம்பெற்றது.ஜெனீவா முருகதாசன் திடலில் நிறைவு பெறும் இந்த மக்கள் போராட்டம் போராட்டத்தின் நிறைவில் முக்கியமாக கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தொடர்ச்சியாக பல …

Read More »

ஊழல் நாடுகளில் தொடர்ந்தும் இந்தியா – சிங்கப்பூர் நியூசிலாந்து ஊழல் அற்றவை

உலகில் அதிகமாக ஊழல் நடக்கும் நாடுகளை வரிசைப்படுத்தும் சர்வதேச ஊழல் கண்காணிப்பகம் இந்த வருடமும் ஊழல் கணிப்புகளின் வரிசையை வெளியிட்டது.அதில் மிகச்சிறிய முன்னேற்றத்தைக் காட்டிய இந்தியா 40 புள்ளிகளை பெற்று 81 ஆவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.இத்தனையும் அதிகமாக பொதுத்துறையில் அதிகப்படியான ஊழல் என்று குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஊழலற்ற நாடுகளில் முதலிடத்தையும் தக்கவைத்து பெருமைபெற்றுள்ளது. கறுப்பு பணம் மோசடியை முற்றிலும் தவிர்க்க தற்போதைய …

Read More »

சவூதியில் இனி இராணுவத்திலும் பெண்கள்

சவூதியில் ஆண்களைப் போலவே எல்லா செயல்பாடுகளிலும் பெண்கள் ஈடுபடுவதற்கு இருந்த தடைகள் யாவும் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது.முன்னைய அரசின் பழமைவாத சிந்தனைகளிலிருந்து இன்றைய இளவரசர் சல்மான் பல மாற்றங்களை மிகவேகமாக ஏற்படுத்துவது அவதானிக்கமுடிகிறது. பெண்களுக்கான வாகன ஓட்டுனர் உரிமம்,விளையாட்டு போட்டிகளில் மைதானங்களில் பங்குபெறும் உரிமம் என படிப்படியான மாற்றங்களை ஏற்படுத்தி தற்போது இராணுவத்தில் இணைவதற்கான விண்ணப்பிக்க கோரப்பட்டுள்ளது. டிப்ளோமா குறைந்த தகுதியாக கோரப்பட்டுள்ள அதேவேளையில் 25 முதல் 35 வரையான …

Read More »

“N” எழுத்தை தடை செய்யும் சீனா

சீனா நாட்டில் ஆங்கிலம் மற்றும் மன்டலின் ஆகிய மொழிகளில் பயன்படுத்தப்படும் N என்ற எழுத்துக்கு சீன அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது. ஆங்கில எதிர்ப்பை காட்டும் செயற்பாடு என்பதை மறுதலிக்கும் வகையில் சீன அரசு மொழியான மன்டலின் மொழியிலும் N இல் வரும் எழுத்துக்கள் யாவைக்குமாக அந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்புகளும் வரவிடக்கூடாது என்பதில் மிகக்குறியாக இருக்கும் சீன அரசு , சீன இணையத் …

Read More »

இராணுவ ஆக்கிரமிப்புக்கு இன்றைய அரசும் உடந்தை – மக்கள் நேரடி குற்றச்சாட்டு

எமக்கான பூர்வீக நிலங்களில் வாழவிடாது இதுவரைகாலமும்   எமது  வாழ்வாதார அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு நல்லாட்சி அரசு என்று தங்களை சொல்லித்திரியும் அரசினரும் தடுத்து வருவதாக வன்னி மக்கள் நேரடியான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான இராணுவ அடக்குமுறைகளுக்கு இந்த அரசும் தடையாகவே உள்ளது என்று பகிரங்கமாக கொழும்பில் மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் இந்த அரசை நம்பி பயனில்லை என்று தெரிவிக்கும் மக்கள் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காகவே இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னேடுபதாக மக்கள் …

Read More »