Friday , August 7 2020
Home / செய்திகள்

செய்திகள்

வென்றது நெல்லியடி மத்திய கல்லூரி

வடமராட்சி வலய சம்பியனானது 20 வயது ஆண்கள் பிரிவில்வலயமட்ட உதைந்தாட்ட இறுதிப்போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிகல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்தியகல்லூரி அணி ஆடியது.மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3:0 கோல்கணக்கில் நெல்லியடி மத்திய கல்லூரி வெற்றியை தனதாக்கியது.இதன் மூலம் வடமராட்சி வலய சாம்பியனாக நெல்லியடி மத்திய கல்லூரியும் இரண்டாமிடத்தை ஹாட்லிக் கல்லூரியும் தனதாக்கிக் கொண்டன. மாவட்டமட்ட போட்டிகளில் இரு அணிகளும் விரைவில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

TSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெப்பிரவரி மாதம் 24ம் திகதி தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்க 28 வது நிர்வாகப்பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றபோது அதன் நிறைவாக 2019 ம் ஆண்டுக்கான நிர்வாகப்பொதுக்குழு தெரிவு செய்யப்பட்டது.அதன் தலைவராக கடந்த வருடத்தின் தலைவராக இருந்த சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.செயலாளராக ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர் திரு யோகா தினேஷ் தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக கடந்த வருடத்தின் பொருளாளராக இருந்த திருமதி மனோகரி அசோக்குமார் தெரிவு செய்யப்பட்டார்.உப …

Read More »

13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று

நோர்வே நாட்டில் உருவாக்கப்பட்ட நோர்வே தமிழ் பிக்சேர்ஸ் வழங்கும் 13 + to hell திரைப்படம் இன்று ஞாயிற்றுக்கிழமை (24:2:2019) பிற்பகல் 4:30 மணிக்கு ராஜா 2 திரையரங்கில் திரையிடப்படவுளளது. ஐரோப்பியக் கலைஞர்கள் பலரும் பங்கெடுத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தொலைந்து போன நிஜத்தின் தேடல் என்று உப தலைப்பு இடப்பட்டிருக்கிறது. முற்றிலும் இலவச காட்சியாகக் காண்பிக்கப்பட இருக்கும் இந்த திரைப்படத்தை எம் மக்கள் பலரும் வந்து பார்வையிட்டு எம் கலைஞர்களுக்கு …

Read More »

பரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்

திரையுலப்பிரமுகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் பலராலும் பார்க்கப்பட்ட பாராட்டப்பட்ட , திரைப்பட இயக்குனர் செழியனின் டூ லெட் To Let திரைப்படம் பரீஸ் மாநகரத்தின் திரை அரங்கிற்கும் மக்கள் பார்வைக்காக திரையிடப்படவிருக்கிறது. பெரு நகரத்தில் சிறு கனவை எளிமையான சினிமாவாக பிரமாண்டமான திரை அரங்கத்துக்குள் கொண்டு வந்ததில் செழியன் வெற்றிபெற்றிருப்பதாக பலரும் பாராட்டுவதை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. திரைப்படங்களுக்கு இருக்கவேண்டிய பிரமாண்டமாக, அதனோடு இணைந்து திரைக்கதையின் முக்கியத்துவத்துவத்தை உணர்ந்த செழியன் …

Read More »

வலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்

வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. மைதானத்தில் ஆரம்பம் முதலே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய நெல்லியடி மத்திய கல்லூரி இறுதியாட்டத்தில் உடுத்துறை மகா வித்தியாலத்தை எதிர்கொண்டது. தங்கள் கள மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்திலும் நெல்லியடி மத்திய கல்லூரி 5:1 என்ற கோல் கணக்கில் மிகப்பெரிய வெற்றிச்சாதனையை பதிவு செய்தது. இதன்மூலம் …

Read More »

சிறிலங்கா கிரிக்கெட் உபதலைவராக மீண்டும் திரு மதிவாணன்

சிறிலங்கா கிரிக்கெட் இணை உபதலைவர்களில் ஒருவராக திரு மதிவாணன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவரோடு திரு ரவின் விக்கிரமரட்ண அவர்களும் இணை உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆகக்கூடிய 83 வாக்குகளை பெற்ற சாமினி சில்வா சிறிலங்கா கிரிக்கெட்டின் தலைமையை கைப்பற்றினார். தொடர்ந்து திரு ரவின் மற்றும் திரு மதிவாணன் ஆகியோர் முறையே 82 மற்றும் 80 வாக்குகளை பெற்று இணை உபதவைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் …

Read More »

சிறப்பாக நடைபெற்ற ஹாட்லியின் மெய்வல்லுனர் போட்டி 2019

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள் இந்த வருடம் கடந்த சனிக்கிழமை 09ம் திகதி பெப்பிரவரி மாதம் நடைபெற்றது . நிகழ்விற்கு கல்லூரி அதிபர் திரு முகுந்தன் தலைமை தாங்கி நடாத்திய அதேவேளை நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஹாட்லியின் பழைய மாணவரும் ஒய்வு பெற்ற இலங்கை சுங்க வரி திணைக்கள முன்னாள் பணிப்பாளர் திரு.ரவீந்திரகுமார் கலந்து சிறப்பித்திருந்தார்.போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கேடையங்க்களை திருமதி ரவீந்திரகுமார் …

Read More »

சிட்னியில் வெளியான யூனியன் கல்லூரின் “தங்கத்தாரகை” – கானா பிரபா

சிட்னியில் தெல்லிப்பழை யூனியன் கல்லுரியின் தங்கத்தாரகை வெளியீடு கண்டது. யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரின் சிட்னிக் கிளையினர் முன்னெடுப்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை Reg Byrne Community Centre சமூக மையத்தில் “தங்கத் தாரகை” என்ற நூல் வெளியீடு நிகழ்ந்தது. 200 வருடப் பாரம்பரியம் மிக்க தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வரலாற்றுப் பகிர்வுகளைத் தாங்கிய இந்த நூலை எழுதித் தொகுத்தவர் இக் கல்லூரின் முன்னை நாள் அதிபர் கதிர் பாலசுந்தரம் …

Read More »

தேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் ஆகியுள்ளது. அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை மகாஜனா எதிர்கொண்டது. போட்டியின் முடிவில் எவ்வித கோல்களும் இன்றி ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் ( penalty kicks)  3:2 என்ற கோல் கணக்கில் மகாஜனா வெற்றி பெற்று 2018 ம் ஆண்டின் …

Read More »

“வி என் மதியழகன் சொல்லும் செய்திகள்” நூல் வெளியீட்டு விழா

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஒலிபரப்பாளர் வி என் மதியழகன் அவர்களது நூல் வெளியீட்டு விழா   23ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் நடை பெற்றது.கனடாவில் இருந்து கொழும்புக்கு வருகைதந்த வி என் மதியழகன் அவர்கள்  குறிப்பிட்ட நூலை வெளியிடுகிறார். “வி என். மதியழகன் சொல்லும் செய்திகள்” என்ற நூலை வெளியிடும் திரு மதியழகன் அவர்கள் இது இலத்திரனியல் தமிழ் ஊடக வாலாற்றின் செய்தித்துறை கருவி …

Read More »