Tuesday , February 19 2019
Home / Featured Articles

Featured Articles

கிளிநொச்சி மக்களின் ஏற்பாட்டில் மாபெரும் ஒன்று கூடல்

பிரித்தானியா வாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களால் கடந்த 2011 ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுவரும் kilipeople என்ற அமைப்பினரால் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் 1000 விருந்தினர்களின் பங்களிப்புடன் சிறப்புறவிருப்பாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து இப்போது யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய கலாநிதி …

Read More »

“நடுகல்” நாவல் கிளிநொச்சியில் அறிமுகமாகிறது

எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வரும் 23ம் திகதி பிப்ரவரி மாதம் அறிமுகமாகவிருக்கிறது. கல்வி கலாசார மையம் ஒழுங்கு செய்யும் இந்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது. நிகழ்விற்கு வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் திரு குருகுலராசா அவர்கள் தலைமை தாங்கவிருக்கிறார். சிறப்பு வருகையாளராக பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் கலந்துகொள்ளவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடுகல் நாவலுக்கான விமர்சன உரையை யாழ் …

Read More »

ஹாட்லியின் நாத விநோதம் 2019

ஹாட்லிக்கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் வருடாவருடம் பிரமாண்டமாக வழங்கும் நாத விநோதம் அரங்க நிகழ்ச்சி இந்த வருடமும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. நாத விநோதம் 2019 இசையும் நவீன நடனமும் ஒரே மேடையில் இணையும் கலை அரங்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் முற்றிலும் ஈழத்தமிழ் கலைஞர்களின் அரங்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்வு ஏற்கனவே பல ஆண்டுகளாக ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்களால் வெற்றிகரமாக நெறிப்படுத்தப்பட்டு …

Read More »

சிறப்பாக நடைபெற்ற ஹாட்லியின் மெய்வல்லுனர் போட்டி 2019

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள் இந்த வருடம் கடந்த சனிக்கிழமை 09ம் திகதி பெப்பிரவரி மாதம் நடைபெற்றது . நிகழ்விற்கு கல்லூரி அதிபர் திரு முகுந்தன் தலைமை தாங்கி நடாத்திய அதேவேளை நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஹாட்லியின் பழைய மாணவரும் ஒய்வு பெற்ற இலங்கை சுங்க வரி திணைக்கள முன்னாள் பணிப்பாளர் திரு.ரவீந்திரகுமார் கலந்து சிறப்பித்திருந்தார்.போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கேடையங்க்களை திருமதி ரவீந்திரகுமார் …

Read More »

ஐபிசி தமிழின் கைவினை பொருள்களின் யாழ் காட்சியறை திறப்பு

ஐபிசி தமிழின் நீண்ட கால முயற்சியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாணம் நல்லூர்ஆலயம் முன்பாக கைத்தொழில் பேட்டையின் கைவினைப் பொருட்கள் காட்சியகம் மற்றும் விற்பனையகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மண்ணின் பாரம்பரிய விடயங்களை கொண்டவையாகவும் தனித்துவம் வாய்தவையாகவும் அமைந்த கைவினைப் பொருள்கள் பல சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக விலையிலும் தரத்திலும் உருவாக்கபட்டுள்ளமை இங்கு முக்கியமானது. விடுமுறைக்காலங்களில் நல்லூர் ஆலய வளாகங்களுக்கு ஆகக்கூடுதலான சுற்றுலா பயணிகள் பயணிக்கும் இடத்தில் இந்த …

Read More »

முன்னாள் அதிபர் திரு சபாலிங்கம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய யாழ் இந்து

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் முன்னாள் அதி­பர் இ.சபா­லிங்­கத்­தின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று பாடசாலை அரங்கில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது . இந்த நிகழ்விற்கு இந்துக்காலூரி அதிபர் திரு  சதா. நிம­லன் தலை­மை­ ஏற்றிருக்கிறார். ஆகக்கூடுதலான பழைய மாணவர்கள் வருகையோடு இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சரவ­ண­ப­வன்,யாழ்ப்­பாண பல்கலைக்­க­ழக துணை­வேந்­தர் இ.விக்னேஸ்வரன், , வடக்கு மாகாண ஆளு­ந­ரின் செய­லர் இ.இளங்­கோ­வன், கலா­நிதி ஆறு­தி­ரு­மு­ரு­கன், என  பலர் சிறப்பு …

Read More »

சிட்னியில் வெளியான யூனியன் கல்லூரின் “தங்கத்தாரகை” – கானா பிரபா

சிட்னியில் தெல்லிப்பழை யூனியன் கல்லுரியின் தங்கத்தாரகை வெளியீடு கண்டது. யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரின் சிட்னிக் கிளையினர் முன்னெடுப்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை Reg Byrne Community Centre சமூக மையத்தில் “தங்கத் தாரகை” என்ற நூல் வெளியீடு நிகழ்ந்தது. 200 வருடப் பாரம்பரியம் மிக்க தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வரலாற்றுப் பகிர்வுகளைத் தாங்கிய இந்த நூலை எழுதித் தொகுத்தவர் இக் கல்லூரின் முன்னை நாள் அதிபர் கதிர் பாலசுந்தரம் …

Read More »

தமிழ் அவைக்காற்று கழகத்தின் 40 ஆவது ஆண்டு தமிழ் நாடக விழா   

அடுத்த வாரம், செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி, லண்டன் வாடேரஸ்மீட் என்ற பெரும் அரங்கில்(WATERSMEET THEATRE, HIGH ST ,RICKMANSWORTH , WD3 1EH)  மாலை 6மணிக்கு  க பாலேந்திரா தலைமையில் இயங்கும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது.கடந்த 15வருடங்களாக லண்டனில் முதலாவது தமிழ் நாடகப் பள்ளியை நிறுவி வாராந்தம் நாடக வகுப்புகளை தொடர்ந்து செய்து வருகிறது .பயிற்சியாளர்களாக பாலேந்திராவும் ஆனந்தராணியும்செயல்படுகின்றனர்.இந்த நாடகப் பள்ளியின் 15ஆவது ஆண்டு நிறைவும் அதே …

Read More »

தேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் ஆகியுள்ளது. அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை மகாஜனா எதிர்கொண்டது. போட்டியின் முடிவில் எவ்வித கோல்களும் இன்றி ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் ( penalty kicks)  3:2 என்ற கோல் கணக்கில் மகாஜனா வெற்றி பெற்று 2018 ம் ஆண்டின் …

Read More »

“வி என் மதியழகன் சொல்லும் செய்திகள்” நூல் வெளியீட்டு விழா

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஒலிபரப்பாளர் வி என் மதியழகன் அவர்களது நூல் வெளியீட்டு விழா   23ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் நடை பெற்றது.கனடாவில் இருந்து கொழும்புக்கு வருகைதந்த வி என் மதியழகன் அவர்கள்  குறிப்பிட்ட நூலை வெளியிடுகிறார். “வி என். மதியழகன் சொல்லும் செய்திகள்” என்ற நூலை வெளியிடும் திரு மதியழகன் அவர்கள் இது இலத்திரனியல் தமிழ் ஊடக வாலாற்றின் செய்தித்துறை கருவி …

Read More »