Monday , July 13 2020
Home / சாதனைகள்

சாதனைகள்

மண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி

சிறப்பாக லண்டனில் நடைபெற்ற கிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் மக்களின் சொல்லணா துயரங்களின்போது தோள்கொடுத்த வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு அவரது அர்ப்பணிப்பான மக்கள் சேவைக்காகவும் கிளிநொச்சி பிரதேச கல்வி வளர்ச்சிக்கு அவர் வழங்கிவரும் பங்களிப்புக்காகவும் 2019ம் ஆண்டுக்கான  “மண்ணின் மைந்தன்” விருதை வழங்கியுள்ளனர். லண்டனில் முன்னின்று செயற்படும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் ,அரசியல் பிரமுகர்கள்,வர்த்தக வள்ளல்கள் , பல பார்வையாளர்கள் என்று அதிகமான மக்கள் …

Read More »

வலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்

வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. மைதானத்தில் ஆரம்பம் முதலே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய நெல்லியடி மத்திய கல்லூரி இறுதியாட்டத்தில் உடுத்துறை மகா வித்தியாலத்தை எதிர்கொண்டது. தங்கள் கள மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்திலும் நெல்லியடி மத்திய கல்லூரி 5:1 என்ற கோல் கணக்கில் மிகப்பெரிய வெற்றிச்சாதனையை பதிவு செய்தது. இதன்மூலம் …

Read More »

சிறிலங்கா கிரிக்கெட் உபதலைவராக மீண்டும் திரு மதிவாணன்

சிறிலங்கா கிரிக்கெட் இணை உபதலைவர்களில் ஒருவராக திரு மதிவாணன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவரோடு திரு ரவின் விக்கிரமரட்ண அவர்களும் இணை உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆகக்கூடிய 83 வாக்குகளை பெற்ற சாமினி சில்வா சிறிலங்கா கிரிக்கெட்டின் தலைமையை கைப்பற்றினார். தொடர்ந்து திரு ரவின் மற்றும் திரு மதிவாணன் ஆகியோர் முறையே 82 மற்றும் 80 வாக்குகளை பெற்று இணை உபதவைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் …

Read More »

உலகின் தலை சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் தமிழ் பெண்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெண் யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். முதற்கட்டமாக தலைசிறந்த 50 ஆசிரியர்களுள் ஒருவராக திகழ்ந்த யசோதை செல்வக்குமாரன் தற்போது முன்னேற்றத்துடன் தலைசிறந்த 10 ஆசிரியர்கள் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி ஒரு மில்லியன் அமெரிக்க டொடலர் பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. அவுஸ்ரேலியாவின் மேற்கு …

Read More »

சிறப்பாக நடைபெற்ற ஹாட்லியின் மெய்வல்லுனர் போட்டி 2019

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள் இந்த வருடம் கடந்த சனிக்கிழமை 09ம் திகதி பெப்பிரவரி மாதம் நடைபெற்றது . நிகழ்விற்கு கல்லூரி அதிபர் திரு முகுந்தன் தலைமை தாங்கி நடாத்திய அதேவேளை நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஹாட்லியின் பழைய மாணவரும் ஒய்வு பெற்ற இலங்கை சுங்க வரி திணைக்கள முன்னாள் பணிப்பாளர் திரு.ரவீந்திரகுமார் கலந்து சிறப்பித்திருந்தார்.போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கேடையங்க்களை திருமதி ரவீந்திரகுமார் …

Read More »

முன்னாள் அதிபர் திரு சபாலிங்கம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய யாழ் இந்து

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் முன்னாள் அதி­பர் இ.சபா­லிங்­கத்­தின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று பாடசாலை அரங்கில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது . இந்த நிகழ்விற்கு இந்துக்காலூரி அதிபர் திரு  சதா. நிம­லன் தலை­மை­ ஏற்றிருக்கிறார். ஆகக்கூடுதலான பழைய மாணவர்கள் வருகையோடு இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சரவ­ண­ப­வன்,யாழ்ப்­பாண பல்கலைக்­க­ழக துணை­வேந்­தர் இ.விக்னேஸ்வரன், , வடக்கு மாகாண ஆளு­ந­ரின் செய­லர் இ.இளங்­கோ­வன், கலா­நிதி ஆறு­தி­ரு­மு­ரு­கன், என  பலர் சிறப்பு …

Read More »

தேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் ஆகியுள்ளது. அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை மகாஜனா எதிர்கொண்டது. போட்டியின் முடிவில் எவ்வித கோல்களும் இன்றி ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் ( penalty kicks)  3:2 என்ற கோல் கணக்கில் மகாஜனா வெற்றி பெற்று 2018 ம் ஆண்டின் …

Read More »

தெற்காசிய விளையாட்டு – வட மாகாண வீரர் நான்காமிடம்

நடைபெற்று முடிந்த தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து பங்கு பற்றிய ஒரே ஒரு வீரரான பிரகாஷ்ராஜ் இறுதிவரை சளைக்காமல் தன் போட்டித்திறனையும் மெய்வல்லுனர் ஆளுமையையும் தெற்காசிய மட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தட்டெறிதல்   போட்டியில் நான்காமிடத்தை பெற்ற பிரகாஷ்ராஜ் வட மாகாண வீரராக இன்னொரு நிலை தாண்டி தன் திறமையை பதிவு செய்துள்ளார். இந்தியாவின் வீரர்  அஜே 50.11m தூரம் எறிந்து தங்க பதக்கம் பெற்றிருந்தார்.அத்துடன்  இரண்டாவது இடம் வெள்ளிப்பதக்கத்தை …

Read More »

சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஹாட்லியின் பிரகாஷ்ராஜ்

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஹாட்லியின் பிரகாஷ்ராஜ் இந்த போட்டிகளில் பங்கேற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். அண்மையில் அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கம் சுவீகரித்து சாதனை முறியடிப்பு செய்து பெருமை சேர்த்த பிரகாஷ்ராஜ் தெற்காசியப் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றும் வட மாகாண வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தட்டெறிதல் போட்டியில்  பங்கேற்க தயாராகும் பிரகாஷ்ராஜ்  தெற்காசிய போட்டிகளில் பங்கேற்பதற்கான அடைவு மட்டத்தை அடைந்து திறம்பட …

Read More »

தமிழக விஞ்ஞானி தலைமையில் ஏவப்பட்ட செய்மதி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ தமிழகத்தின் தமிழ் விஞ்ஞானி தலைமையில்  விண்ணில் வெற்றிகரமாக  செய்மதியை அனுப்பியுள்ளது.தமிழகத்தின் விஞ்ஞானியான சிவன் அவர்கள் இஸ்ரோவின் தலைமை பொறுப்பை ஏற்றபின் ஏவப்பட்ட முதலாவது செயற்கைகோள் என்று குறிப்பிடப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து சரியாக மாலை 4 மணி 56 நிமிடத்திற்கு வெற்றிகரமாக விண்ணுக்கு சென்றது.ஜிஸாட் 6 A(GSAT-6A) என பெயர் குறிப்பிடப்படும் இந்த செயற்கைகோள் நவீனமயப்படுத்தப்பட்ட  தகவல் தொழில்நுட்ப …

Read More »